ஆசை ஆசை ஆசை.. பிரேமலதா வீசிய வெடி.. அரண்ட தேமுதிகவினர்.. பாஜகவுல கூப்பிட்டு சொல்லிட்டாங்களாமே? நிஜமா
சென்னை: 14+1 சீட்டுகள் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து, மொத்த கட்சிகளையும் அலறவிட்டுள்ளார் தேமுதிக தலைவர் பிரேமலதா. இதில் ஹைலைட் என்னவென்றால், தேமுதிக கட்சியினரே பிரேமலதாவின் 14+1 பார்த்து மிரண்டு போய் கிடக்கிறார்களாம்.
அன்று எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தேமுதிக என்ற கட்சியை விஜயகாந்த் செதுக்கினார் என்பதை தமிழகம் நன்கறியும்.. தேமுதிகவை சாராத பிற கட்சியினரே இதை நன்றாக அறிந்தவர்கள்தான்.

செல்வாக்கு: அப்படி செல்வாக்குடன் இருந்த தேமுதிக சரிவை கண்டதற்கு, குடும்ப அரசியல்தான் காரணம் என்று சில விமர்சனங்கள் எப்போதுமே உண்டு.. முக்கியமாக, பிரேமலதாவும், சுதீஷும்தான் காரணம் என்ற முனகல்கள் இப்போதுவரை கட்சிக்குள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது..
எனினும், விஜயகாந்த் என்ற மாமனிதருக்காக, அயராத உழைப்புக்காக, அவரது குணத்துக்காக, மொத்த கட்சியினரும் பொறுமையுடன் கட்சிக்குள் இருந்தார்கள். சகித்துக்கொள்ளவே முடியாதவர்கள் சிலர் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அப்படியே வெளியேறிவர்களும் விஜயகாந்த்தை ஒருபோதும் வெறுக்காமல் உள்ளனர் என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது.
முக்கியத்துவம்: கடந்த 2016ம் ஆண்டு தேர்தலிலேயே பிரேமலதாவுக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் தலைதூக்க தொடங்கியது.. தேமுதிக என்ற பிரம்மாண்டமான கட்சிக்கு பிரேமலதாவின் பீரங்கி பிரச்சாரம் மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்தது.. டெல்லி மேலிட தலைவர்களே பிரேமலதாவின் பிரச்சார கண்டு ஆச்சரியப்படுவார்களாம். விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்படைய துவங்கவும், கட்சியின் செயல்பாடுகளில் பிரேமலதாவின் ஆக்கிரமிப்பு அதிகமாகிவிட்டது.
தமிழக மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களை பற்றி பெரிதாக பேசாமல், அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல், தேர்தல் நேரங்களில் சீட், கூட்டணி, பேரங்களிலேயே தேமுதிக செயல்பட்டதாக வெளிப்படையான விமர்சனங்களும் வெடிக்க துவங்கின.. 5.1 சதவீத வாக்குகளை பெற்று, இப்போது 2.41 சதவீதம் என்று வாக்கு சதவீதம் சுருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
தேமுதிக: இந்த வாக்கு சதவீதம் உண்மையா? யார் நிர்ணயித்தது? என்றுகூட தெரியாது. ஒருவேளை இதைவிட அதிகமான வாக்கு சதவீதம்கூட தேமுதிகவுக்கு இருக்கலாம்.. எனினும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்தே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.
தற்போது விரைவில் தேர்தல் வரப்போகிறது. இந்த முறை எப்படியும் தேமுதிகவுக்கு 3 சீட் வரை கிடைக்கும் என்றே பலராலும் யூகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் நேற்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்ட முடிவில் பிரேமலதா பேசியபோது, 14 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்.
பாஜக: அநேகமாக பாஜக கூட்டணியுடன்தான் தேமுதிக போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விஜய்காந்தின் ஆதரவு வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவதில், பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. காரணம், நாடாளுமன்ற தேர்தல் என்பதால், தேமுதிகவுக்கு வாக்களித்தாலும் அக்கட்சியில் ஜெயிக்க முடியாது.. அதனால் மோடிக்கு வாக்களிப்போம் என்கிற கான்செப்டில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பாஜக மேலிடம் யோசித்துத்தான் விஜய்காந்தை கௌரவப்படுத்தி விருது அறிவித்ததாக சொல்கிறார்கள்.
அனுதாப ஓட்டுக்கள்: இதெல்லாம் அரசியல் கணக்கு என்றாலும், தேமுதிக வாக்குகள் அத்தனையும் பாஜகவுக்கு மாறிவிடுமா? அல்லது விஜயகாந்த்துக்கான அனுதாப ஓட்டுக்கள் அனைத்துமே தேமுதிகவின் ஓட்டு வங்கியை உயர்த்திவிடுமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் நமக்கு பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதாவது, 13+1 சீட்டுகளை கேட்பது சரியில்ல, தற்போதைய நிலையை உணர்ந்து நமக்கான உயரத்தை அளவிட வேண்டும் என்கிற குரல் தேமுதிக வட்டாரங்களிலேயே எதிரொலிக்க துவங்கியிருக்கிறதாம்.. 13+1 சீட் என்பது, பிரேமலதாவின் பேராசையாகவே பார்க்கப்படுகிற தவிர, தேமுதிகவினரின் எண்ணமாக கருத முடியாது என்கிறார்களாம்.
ராஜ்யசபா : அதுமட்டுமல்ல, ராஜ்யசபா சீட் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை, லோக்சபாவில் 2 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என்று 2 வாரங்களுக்கு முன்பே தேமுதிக தலைமைக்கு பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். அந்த நிலைப்பாட்டில் இப்போது வரை மாற்றமில்லை என்கிறது பாஜக மேலிட தொடர்பாளர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள்.
பாஜகவே தங்கள் முடிவை திடமாக அறிவித்தபிறகும்கூட, 13+1 சீட்டுகளை யார் தருவார்கள்? கடந்த முறை தேர்தலிலேயே தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காமல் தவிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்த முறை தேமுதிகவின் அனுதாப ஓட்டுக்களை கணக்கிட்டாலும், இவ்வளவு சீட்களை எடப்பாடி தருவாரா? என்று தெரியவில்லை..
பேச்சுவார்த்தை: திமுகவில் ஏற்கனவே "ஹவுஸ்ஃபுல்"லாக இருக்கிறது.. கூட்டணி வைக்கப்படுவதாக சொல்லப்படும், மநீம கமலையே இன்னும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாத நிலை உள்ளது.. அப்படியிருக்கும்போது, தேமுதிகவுக்கு அழைப்பு இருக்குமா என தெரியவில்லை..
இதற்கு பேசாமல், தேமுதிக தனியாகவே நின்று போட்டியிடலாமே? என்றும் சிலர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. ஆக மொத்தம், 13+1 எண்ணிக்கையானது ரொம்ம்ம்ப ஜாஸ்தியா தெரியுதோ?? பொறுத்திருந்து பார்ப்போம்.
பாஜகவே தங்கள் முடிவை திடமாக அறிவித்தபிறகும்கூட, 13+1 சீட்டுகளை யார் தருவார்கள்? கடந்த முறை தேர்தலிலேயே தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காமல் தவிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்த முறை தேமுதிகவின் அனுதாப ஓட்டுக்களை கணக்கிட்டாலும், இவ்வளவு சீட்களை எடப்பாடி தருவாரா? என்று தெரியவில்லை..
பேச்சுவார்த்தை: திமுகவில் ஏற்கனவே "ஹவுஸ்ஃபுல்"லாக இருக்கிறது.. கூட்டணி வைக்கப்படுவதாக சொல்லப்படும், மநீம கமலையே இன்னும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாத நிலை உள்ளது.. அப்படியிருக்கும்போது, தேமுதிகவுக்கு அழைப்பு இருக்குமா என தெரியவில்லை.. இதற்கு பேசாமல், தேமுதிக தனியாகவே நின்று போட்டியிடலாமே? என்றும் சிலர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..
இதற்கு காரணம், விஜயகாந்த் மறைவின்போது, அவர் செய்த எத்தனையோ தர்மகாரியங்களும், நல்லியல்புகளும் மீடியாக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தன.. முகம் தெரியாதவர்கள்கூட அன்றையதினம் விஜயகாந்த் செய்த பல நன்மைகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டிருந்தனர்.. இவையெல்லாம் பல்வேறு இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியதுடன், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை இன்று தமிழகத்தில் உருவாக்கிவிட்டுள்ளது..
கூட்டணி: விஜயகாந்த்தை அதுவரை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்கூட, திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.. அந்தவகையில், தற்சமயம் தேமுதிகவுக்கான ஆதரவு ஓரளவு கூடியிருப்பதாகவே கருதப்படுகிறது.. எனினும், 13+1 எண்ணிக்கையானது ரொம்ம்ம்ப ஜாஸ்தியா தெரியுதே? என்று தமிழக கட்சிகள் கருதுகின்றனவாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications