"உலை" வைத்த பிரபலம்.. அடியோடு சிதறும் ஓட்டுகள்.. கொங்குவில் கால் வைத்ததுமே பதறிப்போன எடப்பாடி.. அடடே
சென்னை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகே சசிகலா, அதிமுகவை எப்படியாவது ஒன்றுசேர்ப்பேன் என்று சொல்லி வருகிறார்.. அத்துடன், அவரது அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வும் ஆரம்பமாகி உள்ளது. என்ன நடந்தது?
அதிமுகவின் பொதுச்செயலாளராக, தாம் தொடர்ந்து நீடிப்பதாக சசிகலா தொடர்ந்த வழக்கு, இன்னும் முடியவில்லை.. அதனால்தான், பொதுச்செயலாளர் என்ற பெயரில் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
ஆன்மீக பயணம்: அதேசமயம், ஆன்மீக சுற்றுப்பயணம் அதாவது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகிறார்.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமியின் கொங்கு கோட்டைக்குள் நுழைந்துள்ளார் சசிகலா.
கோவை, ஈரோடு, பெருந்துறை என ஒரு இடம்விடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. செல்லுமிடமெல்லாம் திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். அதேசமயம் சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம், "அகங்காரம், ஆணவம் இல்லாமல் அனைத்தையும் தூக்கி தூரப்போட்டுவிட்டு ஒன்றாக நிற்போம், ஒற்றுமையாக சேர்ந்து, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றும் சூசகமாக சொல்லி வருகிறார்.

பெருந்துறை: இப்படித்தான், பெருந்துறை பைபாஸ் சாலையில் சசிகலா வந்தார்.. அப்போது, 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு தந்தனர்.. பிறகு திடீரென "அம்மா, நீங்க கட்சியை உடனே கையில் எடுங்க" என்று திடீரென கோஷமிட்டனர். உடனே அவர்களை திரும்பி பார்த்த சசிகலா, மெல்ல கை அசைத்தார்.. பிறகு அவர்களை பார்த்து கும்பிட்டபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
கொங்கு மண்டலத்துக்குள் திடுதிப்பென்று இந்த சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொள்ளவில்லையாம். எல்லாம் முன்பே திட்டமிட்டதுதான் என்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஈரோடு, சசிகலாவின் இந்த பயணம் குறித்து அவரது ஆதரவாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தோம். அப்போது அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட பிரத்யேகமாக தகவல்தான் இது:
கொங்கு மண்டலம்: "கொங்கு மண்டல செல்வாக்கில் தான் எடப்பாடி பழனிசாமி உதார் காட்டுகிறார். ஆனால், கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைத் தவிர, அச்சமூகத்தில் உள்ள மற்ற கவுண்டர் சமூகத்தினர் எடப்பாடியை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக, வேட்டுவ கவுண்டர்கள், ஊராளி கவுண்டர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கவுண்டர் சமுக பிரிவினர் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள்.
காரணம், கொங்கு வேளாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் 1 சதவீதம் கூட தங்கள் சாதியை சேர்ந்த மற்ற பிரிவினருக்கு தருவதில்லை என்ற கோபம் தான்.
கொங்கு வேளாளர்: அதேபோல, கொங்கு வேளாளார்களும் மற்ற பிரிவினரை தீண்டத்தகாதவர்களாகத்தான் நடத்துகின்றனராம். எடப்பாடிக்கு எதிராக இந்த பிரச்சனை இருப்பதால், கொங்கு வேளாளர் அல்லாத அச்சமூகத்தின் மற்ற பிரிவினரை தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வரவும், அவர்களை எடப்பாடிக்கு எதிராக ஒன்றிணைக்கவுமான முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் சசிகலா இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்" என்கிறார்கள் சசிகலா முகாம்வாசிகள்.
இந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லப்பட்ட நிலையில், கொங்கு மண்டல விஐபிக்கள் மூலம் சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் ? சசியின் பயணத்தில் என்ன நடக்கிறது ? என்பதை அறிந்து தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறாராம். அத்துடன், சசிகலாவின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் உற்று கவனித்து வருகிறதாம் எடப்பாடி தரப்பு.
முத்திரைகள்: அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரால், "முத்திரை" அதிகமாகி வருவதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே அதிமுகவுக்கான பொதுவான தொண்டர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான், கட்சியை இத்தனை வருடம் ஆல்போல் தழைக்க வைக்க முடிந்தது. இப்போது அப்படி சுமூக சூழலை பார்க்க முடியவில்லை என்கிறார்கள்.
ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்..
ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அப்படி கிடையாது. தமிழகத்தில் எகு நின்றாலும் அவர்களால் வெற்றி பெற முடிநத்து என்றால், அதற்கு காரணம் அவர்கள், அனைவருக்குமான தலைவர்களாக அரவணைத்து செல்லும் தலைவர்களாக இருந்தார்கள்" என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்துக்குள்ளேயே அதிருப்திகள் வெடித்துள்ளதும், அந்த அதிருப்திகளை தனக்கு சாதகமாக சசிகலா பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டுவதும் என பரபரப்புகள் பற்றி கொண்டுள்ளன.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications