Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து பண்ணலாமா? 6 சென்ட் நில ஆவணங்கள்.. சொத்துக்காக நெல்லையில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை காவல்துறை விடாமல் எடுத்து வருகிறது.. எனவே, நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் தாராளமாக புகார் அளிக்கலாம்.. மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கலாம். அதுமட்டுமல்ல, போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த பதிவை ரத்து செய்ய முடியும்.. இதுதெரிந்தும் நில மோசடிகள் பெருகி வருகின்றன. நெல்லையில் என்ன நடந்தது?

சொத்து பிரச்சனை என்றாலே பெரும்பாலும் மூத்த குடிமக்கள்தான் இதில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள்.. தங்களது வாரிசுகளுக்கு செட்டில் மென்ட் பத்திரம் எழுதி தந்துவிடும் சூழலில், வாரிசுகளும் தாய்-தகப்பனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

Gift deed property document 6 cent land 6

இதன் காரணமாக, சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், வயதான பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் துயரத்துக்கு ஆளாக நேரிடுகிறது.

தான செட்டில்மென்ட் ரத்து

அதனால்தான் சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்திருந்தனர்.. அதில், "சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

எனவே, தான செட்டில்மென்ட் எழுதி வைத்த உடனேயே, அதன் அனுபவமோ, ஆவணமோ அந்த தான செட்டில்மென்ட் எழுதி வாங்குபவர்களுக்கு வந்தாலும், மூத்த குடிமக்களை அவர்கள் கவனிக்காமல் இருந்தாலோ, அல்லது உணவு, உபசரிப்பு, பராமரிப்பு செய்யாமல் இருந்தாலோ, தான செட்டில்மென்ட் எழுதியவர் கோட்டாட்சியரிடம் புகார் செய்யலாம்.

செட்டில்மென்ட் பத்திரம்

அந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட்டையே ரத்து செய்யக்கூடிய அதிகாரம், கோட்டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உள்ளது.

கோட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி என்ற அந்தஸ்தில் இவர்கள் உள்ளதால், இந்த தான செட்டில்மென்ட்டை ரத்து செய்யக்கூடிய அதிகாரமும் இவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, எழுதி கொடுக்கப்பட்டுள்ள தான ஆவணத்தை ரத்து செய்வதற்கான முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

தான பத்திரம் - 6 சென்ட் நிலம்

அதாவது போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த பதிவை ரத்து செய்யும் வசதிகள் இன்று உள்ளது. எனினும் சொத்து மோசடிகள் நீள்கின்றன. நேற்றுகூட ஒரு கும்பல் சிக்கியிருக்கிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுந்தர் சிங்.. 75 வயதான சுந்தர் சிங்குக்கு 44 வயதில் ஜிக்சன் ஐசக் என்ற மகன் உள்ளார்.. இவரைதவிர வேறு வாரிசுகள் சுந்தர் சிங்குக்கு கிடையாது.. தற்போது
மதுரை கூடல் நகரில் வசித்து வருகிறார் ஜிக்சன் ஐசக்.

1990ல் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு அருகே 6 சென்ட் நிலம் வாங்கியிருந்தார் சுந்தர் சிங்.. இதனை கடந்த 2023ல் மகன் பெயருக்கு செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொடுத்தார்.

போலி ஆவணங்கள்

இப்போது அந்த நிலத்திற்கு பட்டா வாங்க ஜிக்சன் ஐசக் முயன்றார்.. அப்பொழுது, நில உரிமையாளர் சுந்தர்சிங் இறந்து விட்டதாகவும், அவரது பெண் வாரிசுகள் சுந்தரி, பவித்ரா ஆகியோர் நிலத்தை அப்துல் ஹுசேன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாகவும் மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த் சுந்தர் சிங், உடனடியாக போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் செய்தார்.

மேலப்பாளையம் போலீசார் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டனர்.. இப்படியொரு நிலமோசடிக்கு காரணமே மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் ஹுசைன் என்பது தெரியவந்தது.. இவர்தான், உயிருடன் இருக்கும் நபர்கள் இறந்ததாக போலி ஆதார் அட்டை, இறப்புச்சான்றிதழை தயார் செய்துள்ளார்.

அச்சு அசல் ஒரிஜினல் போலவே பத்திரம்

சுந்தர் சிங்கிற்கு சுந்தரி, பவித்ரா என 2 மகள்கள் இருப்பது போல வாரிசு சான்றிதழையும் தயார் செய்துள்ளார்.. பிறகு நில விற்பனைக்கு தேவையான அத்தனை போலி ஆவணங்களையும், அச்சு அசல் ஒரிஜினல் போலவே தயாரித்து, பத்திரப்பதிவு செய்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்துல் உசேன் 56, மீரான் மைதீன் 50, சுடலை 40, சுடலை உறவினர்கள் காவல்கிணறு பவித்ரா 30, சுந்தரி 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பத்திரப்பதிவு செய்த நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாயாம்.. ஒருவேளை, இந்த போலி பத்திரப்பதிவிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், மேலப்பாளையம் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பார்களா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளதால் விசாரணைகள் துரிதமாகி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+