Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பான் கார்டை மீண்டும் இயக்க முடியுமா.. வருமான வரித்துறை சொன்ன மேஜர் அலர்ட்.. மிஸ் பண்ணாம படிங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காததால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை வருமானவரித்துறை பட்டியலிட்டுள்ளது.. அத்துடன், செயலிழந்த பான் கார்டை எப்படி மீட்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன..

காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.

Can we continue to use a deactivated PAN card and What does the Income Tax department say

பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்த பின்னரே நீங்கள் அவ்வாறு செய்ய முடியும்.

காலக்கெடு: பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை தவறவிட்ட ஒரு நபர், காலக்கெடு முடிந்த பிறகும் அதை இணைக்க முடியும். இருப்பினும், இணைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பான் மீண்டும் செயல்படத் தொடங்கும்.

உதாரணமாக, ஜூலை 20ம் தேதி (அபராதம் செலுத்திய பிறகு) ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கக் கோரினால், ஆகஸ்ட் 19ம் தேதி அல்லது அதற்கு முன் பான் செயல்பாட்டிற்கு வரும்.

செயலிழந்த பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.. குறிப்பாக, முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பாதிப்பு உண்டாகலாம். பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், பெரிய தொகையை வங்கியில் செலுத்துவது, கடன் பெறுவது, மியூச்சுவல் முதலீடு போன்றவை சிக்கலாகலாம். பான் கார்டு செயலிழப்பால், பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.

அதிக விகிதம்: இத்தகைய நிதி பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை தற்போது பட்டியலிட்டுள்ளது. பான் கார்டு செயலிழப்பால், டி.டி.எஸ்., மற்றும் டிசிஎஸ்., பிடித்தங்கள் அதிக விகிதத்தில் மேற்கொள்ளப்படும் வைப்பு நிதி போன்றவற்றிலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. அதே போல, பான் கார்டு செயலிழந்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆனால், வருமான வரித்துறையிடம் இருந்து பணம் திரும்பப் பெற வேண்டியிருந்தால் அதை கோர முடியாது.

டிமெட் கணக்கை துவக்குவதிலும் சிக்கல் ஏற்படலாம். அத்துடன், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் புதிய முதலீடு..மேற்கொள்வதும் பாதிக்கப்படலாம். 50,000 ரூபாய்க்கு மேலான தொகைக்கு யூனிட்கள் வாங்க முடியாது. பங்கு முதலீட்டிலும் இத்தகைய சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம்.. புதிதாக வங்கி கணக்கு துவக்குவது மற்றும் புதிதாக டெபிட் கார்டு பெறுவது போன்றவையும் கடினமாகலாம்.

வாகன விற்பனைகள்: வங்கியில் பணம் செலுத்தும்போது, 50,000த்திற்கு மேலான தொகைக்கு, பான் கார்டு நம்பரை தெரிவிப்பது அவசியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். காப்பீடு பாலிசிகள் தொடர்பாகவும் பாதிப்பை எதிர்கொள்ளலாம்.. சொத்து அல்லது வாகன விற்பனைக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இப்படி பல பாதிப்புகள் இருந்தாலும், செயலிழந்த ஆதார் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, செயலிழந்த பான் கார்டை மறுபடியும் இயக்கி வைக்கலாம்.

வருமான வரித்துறை இணையதளத்தில் இதற்காக விண்ணப்பித்து, 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. வருமான வரித்துறையின், "இ- - பைலிங் போர்ட்டல்" மூலம் பான் கார்டு - ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரித்துறை: இதே போல, "26 ஏஎஸ்" படிவம் மூலமும் தெரிந்து கொள்ளலாம். பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பிற்கு, வருமான வரி வெப்சைட்டில் உள்ள ஆதார் இணைப்பு வசதியை அணுக வேண்டும். உரிய விபரங்களை சமர்ப்பித்து, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இணைப்பை உறுதி செய்தபிறகு, 30 நாட்களில் பான் கார்டு மறுபடியும் செயல்பாட்டிற்கு வரும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+