வாகன பார்க்கிங் முதல் டோல்கேட் கட்டணம் வரை.. அடேங்கப்பா, கூகுள் மேப் லொகேஷன்.. சூப்பர் வசதிகள்
சென்னை: உங்க மொபைலில் கூகுள் மேப்ஸ் மூலம் என்னென்ன வசதிகளை தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? ஒருசிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
சமீப காலங்களாகவே கூகுள் மேப்களின் சேவை தவிர்க்க முடியாததாகிவிட்டது.. நாம் வாகனங்களில் செல்லும்போது, எந்த பொதுப்போக்குவரத்தில் பயணித்தாலும் இந்த கூகுள் மேப் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

வழிமுறைகள்: இந்த கூகுள் மேப் மூலம் நமக்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா? நாம் எங்கு செல்லவேண்டுமோ, அந்த இலக்குக்கான வழியை விரைவாகவும், எளிதாகவும் தெரிந்து கொள்ள உதவும் ஆப் இதுவாகும்.
அதன்படி, கூகுள் மேப்பில், நாம் எந்த இடத்தில் உள்ளோமோ, அந்த லொகேஷனை, நீலநிற புள்ளியில் காட்டும்.. ஒருவேளை நம் இருப்பிடத்தை கூகுள் மேப்பால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அந்த புளூ கலர் புள்ளியை சுற்றிலும், வெளீர் நீலநிறத்தில் வட்டமாக தோன்றும்.. இந்த வெளீர் நீல நிற வட்டத்திற்குள், எங்குவேண்டுமானாலும் நம்முடைய லொகேஷன் இருக்கலாம் என்று அர்த்தம்.
வசதிகள்: அதேசமயம், இந்த மேப்பில் நீல நிற புள்ளி அல்லது சாம்பல் நிறத்தில் இருந்தால், நம்முடைய இருப்பிடத்தை கூகுளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.. அதாவது பழைய லொகேஷனையே மேப் காட்டிக் கொண்டிருப்பதாக அர்த்தம்.. அதேபோல, செல்போனில் சிக்னல் இல்லாத சமயங்களிலும் இப்படி லொகேஷனை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது.
இந்த கூகுள் மேப் மூலம், நாம் செல்லும் வழியிலுள்ள டோல்கேட்களின் விவரங்களையும், அதன் கட்டணங்களையும்கூட அறிய முடியும்.. வழியிலுள்ள சுங்க சாவடிகளின் மொத்த கட்டண விவரத்தை அறிய வேண்டுமானால், Settings என்ற ஆப்பிற்கு சென்று Show Toll Price என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
சுரங்கப்பாதை: அதேபோல, கூகுள் மேப்களில், கார்கள், பைக்குகள், நடைப்பயிற்சிக்கான ஓட்டுநர் திசைகளையும் அறிந்து கொள்வதுடன், மெட்ரோ, சுரங்கப்பாதை, உள்ளிட்ட மற்ற பொதுப்போக்குவரத்துக்கான வழியையும் கண்டுபிடிக்க முடியும்.. இதற்கு லொகேஷனை தேடி, Details என்ற பக்கத்தை விரிவுபடுத்தி, "Public transport nearby" என்ற பகுதியை செலக்ட் செய்து பார்க்கலாம்.
அதேபோல, நீங்கள் செல்ல வேண்டிய சாலையில் உள்ள ட்ராஃபிக் நிலைமைகளையும் முன்கூட்டியே கூகுள் மேப் நமக்கு காட்டி தந்துவிடும்.. இதனால் நமக்கு நேரமும் மிச்சப்படுத்தப்படும்.
பார்க்கிங் எங்கே: சிலசமயம், நம்முடைய வாகனத்தை அவசரத்தில் பார்க் செய்துவிட்டு, பிறகு எங்கு வண்டியை பார்க்கிங் செய்துள்ளோம் என்பதை மறந்துவிடுவோம்.. இதையும் கூகுள் மேப்கள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம்.. இதற்கு பார்க்கிங்கைக் காட்டும் நீல நிற ஐகானுக்குள் நுழைந்து, Pop up Medu-விலிருந்து பார்க்கிங்கை சேமிக்க வேண்டும்.
இப்போது, நாம் செல்ல வேண்டிய அல்லது செல்வதற்கு திட்டமிடும் இடத்திற்கான பார்க்கிங் நிலையை கூகுள் மேப் நமக்கு காண்பிக்கும், இதற்கு லொகேஷனை தேடி டீட்டெயில்ஸ் பக்கத்தை விரிவுபடுத்தி 'P' ஐகானை தேர்வு செய்து பார்க்கலாம்.
அதேபோல, கூகுள் மேப் ஹிஸ்டரியை அழிக்க வேண்டுமானால், ஐபோன் வைத்திருப்பவர்கள், கூகுள் மேப்ஸ் செட்டிங்ஸ்-ல் Map History-யை தேர்வு செய்து, அதற்கு மேலிருக்கும் "Search" என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தேதி வாரியாகவும் பயண விவரங்களை டெலிட் செய்து கொள்ளலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications