காரைக்குடியை "திருப்பி கொடுத்திரலாமா.." ஆவேசமான ப.சிதம்பரம்.. அதிர்ந்து போன காங்கிரஸ் நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரைக்குடி தொகுதியை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று, காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 25 தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.

கடந்த சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகளை, திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கிய நிலையில், இப்போது கிட்டத்தட்ட பாதி அளவு குறைந்து விட்டது திமுக.

காரைக்குடி தொகுதி

காரைக்குடி தொகுதி

முதலில் 20 தொகுதிகள்தான் வழங்குவதாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக முயற்சி செய்து, திரும்ப திரும்ப பேசியதன் காரணமாக 25 தொகுதிகள் வரை கொடுத்துள்ளது திமுக. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஒன்று காரைக்குடி. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் எச்.ராஜா வேட்பாளராக களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

கூட்டம் இல்லை

கூட்டம் இல்லை


இந்த நிலையில்தான், காரைக்குடி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்த கூட்டத்திற்கு போதிய அளவுக்கு நிர்வாகிகள் கூட்டம் வரவில்லை. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை.

திருப்பி கொடுக்கலாம்

திருப்பி கொடுக்கலாம்

எனவே, காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமைக் கட்சிகளை நம்பி தான் போட்டியிட வேண்டும். இப்படி இருந்தால் நாம் இந்த தொகுதியை திருப்பிக் கொடுத்துவிடலாம். காங்கிரஸ் கட்சியினர் களத்தில் பணியாற்றாமல் இருந்தால் அடுத்த முறை நமக்கு இந்த 25 தொகுதிகள் கூட கிடைக்காது. இவ்வாறு ப.சிதம்பரம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

ப.சிதம்பரம் அதிருப்தி

ப.சிதம்பரம் அதிருப்தி

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களை காங்கிரஸ் பெற்ற போது 8 தொகுதிகளில் மட்டும் தான் அந்த கட்சி வெற்றி பெற முடிந்தது. இதன் காரணமாகத்தான் தற்போது தொகுதிகள் அளவை குறைத்தது திமுக. எனவேதான், மீண்டும் இப்படி பணிகளில் சுணக்கம் காட்டினால் அடுத்த முறை இந்த அளவுக்கு தொகுதிகள் கூட நமக்கு கிடைக்காது என்று சிதம்பரம் கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+