டோரா சிறுமியை சுற்றி வரும் பூனைகள்.. ஒரே ஒரு "நாய்".. எங்கே இருக்கு.. கண்டுபிடிங்க! 5 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் ஒன்று மறைந்திருக்கிறது. பல பூனைகள் உங்கள் கண்ணுக்கு தெரியும். ஆனால் இங்கே மறைந்து இருக்கும் நாய் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா என்று பாருங்கள். அதுவும் 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று சவால் மிக்கவையாக இருக்கும். ஒளியியல் மாயை என்றழைக்கப்படும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றமும், சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு வித தோற்றமும் தெரியும். இதனால் இதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க இணைய வாசிகள் பலரும் போட்டி போட்டு முயற்சித்து வருகின்றனர்.

இதனால் இந்த படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டது. சற்று சவால் மிக்கவையாக இருப்பதால் இந்த படங்கள் நெட்டிசன்களின் ஓய்வு நேரத்தில் நல்ல தீனியாக உள்ளது. இதனால், இந்த படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் அதை தங்கள் நட்பு வட்டாரத்த்ல் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் டோரா ஹேர் ஸ்டைலில் சேரில் அமர்ந்து இருக்கு சிறுமி ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த சிறுமியை நாலாபுறமும் சுற்றியபடி பூனைகள் உலா வருகின்றன. அந்த சிறுமிக்கு பூனை ரொம்ப பிடிக்கும் என்பதால், அவளது வீட்டு புகைப்படத்தில் கூட பூனைகள் இருக்கின்றன.
இப்படி பல பூனைகள் உலா வரும் இந்த படத்தில் தான் நாய் ஒன்றும் மறைந்து இருக்கிறது. இந்த நாயை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர். குறிப்பிட்ட 5 செகண்டிற்குள் நாய் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருந்தால் நீங்க ஸ்மார்ட் தான்.
மியாவ் மியாவ் "பூனைக்குட்டி.. படத்தில் எங்கே இருக்கு? கண்டுபிடிங்க.. 8 செகண்ட் தான் டைம்!
உங்கள் கண்பார்வை திறன் அபாரமாக உள்ளது. ஆனால், 5 செகண்டில் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இப்போது எளிதில் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போதும் நாய் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
இதை வைத்து முயற்சித்து பாருங்கள். அதாவது நாய் படத்தின் கீழ் பகுதியில் தரையில் உள்ளது என்று தேடினால் கிடைக்காது. அந்த சிறுமிக்கு பின் புறம் மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள் எளிதில் நாய் இருப்பதை கண்டுபிடித்துவிடுவீர்கள். இப்போதும் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications