Brain teaser: இந்த 5 பேரில் இடது கை பழக்கம் உடையவர் யார்னு கண்டுபிடிங்க! ஜஸ்ட் 11 செகன்ட்ஸ்!
சென்னை: நாங்கள் கொடுத்துள்ள படங்களில் இடது கை பழக்கம் கொண்டவர் யார் என்பதை கண்டறிய முடியுமா? அதுவும் 11 வினாடிகளில்! இது முற்றிலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயலாகும். இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் கேம்களை விளையாடி மூளையின் செயல்திறனை அதிகரியுங்கள்.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தைகள் எனப்படுவது மூளைக்கு சிறந்த வேலையாகும். மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!
இது போன்ற படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகின்றன. மூளைக்கு வேலை கொடுக்கும் படங்களாக இவை அமைந்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் இவை பிரபலமடைந்துள்ளன. பொதுவாக கணக்கிலோ பொது அறிவிலோ வீக்காக இருப்பவர்கள் கூட நாமும் முயற்சி செய்யலாமே என நினைப்பதுண்டு.
அதுதான் கட்ஸ்! இப்படித்தான் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒளியின் மாயையால் இவை நமக்கு குழப்பத்தை விளைவிப்பதாக தெரிகிறது. ஆனால் பழகினால் எல்லாமே ஈஸிதான். சரி விஷயத்திற்கு வருவோம். நாங்கள் ஒரு படத்தை கொடுத்துள்ளோம்.
அதில் 5 தொழில்களை செய்யும் நபர்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது சுத்தியலை பயன்படுத்தும் நபர், ரம்பத்தை கொண்டு மரம் அறுக்கும் தொழிலாளி, கணக்கு வழக்குகள் எழுதுபவர், புகைப்படக் கலைஞர், ஹோட்டலில் உணவு பரிமாறும் வெயிட்டர் என 5 புகைப்படங்கள் உள்ளன. இவர்களில் ஒருவர் மட்டுமே இடது கை பழக்கம் கொண்டவர்.
அவர் யார் என்பதை மூளையை பயன்படுத்தி 11 நிமிடங்களில் கண்டுபிடிக்க வேண்டும். 1, 2, ,3, 4, 5, 6, .... 11 டைம் ஓவர்! என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடிக்காவிட்டால் அதற்கான விடையை நாங்கள் சொல்கிறோம். அதாவது இந்த 5 படங்களில் இடது கை பழக்கமுடையவர் வெயிட்டர்.

அது எப்படி தெரியுமா? பொதுவாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவை தட்டில் வைத்து கொண்டு வரும் போது வெயிட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படாத கையையே பயன்படுத்துவார்கள். அப்போதுதான் வேகமாக மற்றொரு கையால் உணவுகளை வரிசையாக பரிமாற முடியும். அந்த வகையில் இந்த வெயிட்டர் வலது கையில் உணவை கொண்டு வருவதால் அவரை பொருத்தமட்டில் அந்த வலது கையை (non dominant hand) அதிகம் பயன்படுத்தாதவர் என தெரிகிறது. எனவே அவர்தான் இடது கை பழக்கம் உடையவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications