குரூப்ல டூப்பு யாரு? 16 பெண்களில் odd woman out பெண்ணை கண்டுபிடிங்க! வெறும் 3 செகண்டில்!
சென்னை: கொடுக்கப்பட்டுள்ள 16 பெண்களின் முகங்கள் எல்லாமே ஒன்றுதான். ஆனால் ஒன்றில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசமான முகம் கொண்ட பெண் யார் என்பதை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தைகள் எனப்படுவது மூளைக்கு சிறந்த வேலையாகும். மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!
இது போன்ற படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகின்றன. தேவையில்லாமல் வெட்டியாக பொழுதை கழிக்காமல் கொஞ்சமாவது மூளைக்கு வேலை கொடுக்கும் இது போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.
இன்று உங்கள் கண் பார்வைக்கு நல்ல வேலை என்று சொல்லலாம். விசுவல் ஸ்கில் டெஸ்ட் ஆகும். அதாவது ஒரு படத்தில் 16 பெண்களின் முகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாமே ஒன்று போல் இருக்கின்றன. ஆனால் அந்த 16 பெண்களில் ஒரு பெண் மட்டும் வித்தியாசமானவர். அந்த பெண் யார் என்பதை கண்டறிய வேண்டும்.
அதுவும் 3 வினாடிகளில் கண்டறிய வேண்டும். நாம் ஆரம்ப பள்ளியில் படித்த போது Find the odd man out என இருக்கும். அதில் 5 விடைகளில் 4 விலங்குகளின் பெயராக இருக்கும் ஒன்று மட்டும் பறவையின் பெயராக இருக்கும். இதில் 5 விடைகளில் எது ஆட் மேன் அவுட் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதுபோல்தான் இதுவும்! 3 வினாடி என்பது போதுமான டைம்தான். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? நன்றாக படங்களை பார்த்து கண்டறியுங்கள். ஓகே நாங்களே சொல்லிவிடுகிறோம். அதே வேளையில் சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு எங்கள் பாராட்டு.
விடை எது தெரியுமா! 3ஆவது வரிசையில் இருக்கும் 3ஆவது பெண்தான் அந்த odd woman out! எல்லா படங்களும் ஒரே மாதிரி கண்கள், காதுகள், ஹேர் ஸ்டைல், மூக்கு, முழி என இருந்தாலும் அந்த பெண்ணின் லிப்ஸ்டிக் நிறம் மட்டும் வேறு ஒரு ஷேடில் உள்ளது. இதுதான் வித்தியாசம்! இப்படித்தான் ஒவ்வொரு படங்களையும் கூர்ந்து கவனித்தால் விடையை கண்டறிவது எளிது.

-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications