வீட்டு வாடகையை வைத்து.. புதிய வருமான வரி regimeல் விலக்குகளை பெற முடியுமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய வருமான வரி பிரிவில் இருக்கும் பலரும் புதிய வருமான வரி பிரிவிற்கு மாற தொடங்கி உள்ளனர். முக்கியமாக புதிய வருமான வரி பிரிவிற்கு 12.75 லட்சம் ரூபாய் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் பலரும் அதை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் இதில் HRA விலக்கு.. அதாவது வீட்டு வாடகைக்கு கொடுக்கப்படும் படியில் விலக்கு பெற முடியுமா? என்று மக்கள் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.

ஆனால் புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. அதாவது NPS.. தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடுகள் செய்தால் அதற்கு மட்டும் விலக்கு பெற முடியும். அதை தவிர வேறு எதற்கும் ஒரு ரூபாய் கூட விலக்கு பெற முடியாது. 12.75 லட்சம் ரூபாய் வரை இதில் உங்களுக்கு வரியே இருக்காது. இத முறைப்படி இதில் HRA விலக்கு.. அதாவது வீட்டு வாடகைக்கு கொடுக்கப்படும் படியில் விலக்கு பெறவும் முடியாது. ஏனென்றால் அந்த சலுகையும் இதில் கிடையாது. ஏனென்றால் மொத்தமாக 12.75 லட்சம் ரூபாய் வரை இதில் உங்களுக்கு வரியே இருக்காது.

income tax

உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

12 லட்சம் ரூபாய் வரை புதிய regime ல் வரி இல்லை என்றால் ஸ்லாப் ஏன் 4 லட்சத்தில் இருந்து துவங்குகிறது என்ற சந்தேகம் வரலாம்.

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

உங்கள் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

பழைய முறை வருமான வரி என்றால் என்ன?

பழைய முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


வரி விலக்கு

அதே சமயம் இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர். இதை சோதனை செய்கின்றனர்.

அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலக்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

வீட்டு வாடகைக்கு டிடிஎஸ் கட்ட வேண்டுமா?

வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை. இதனால் சிறிய வீடுகளில் வாடகை விடுபவர்கள்.. குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுபவர்கள் பயன் அடைவார்கள். அதோடு பலர் புதிதாக வாடகைக்கு வீடு விடவும் வழிவகுக்கும். வாடகை வீடுகளின் எண்ணிக்கை இதனால் உயரும். நேற்று பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருவேளை நீங்கள் 80C ஐ முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், மேலும் வருமான வரி விலக்குகளை பெற விரும்பினால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் விலக்கு விருப்பத்தைப் பெற NPSக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் முதலீடு செய்வது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+