நீங்க ஜீனியசா? உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. படத்திற்கான விடை என்ன? 15 செகண்டிற்குள் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் கணக்கு படத்தில் விடுபட்ட எண் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 3 சமன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஏ, பி, சி யின் கூடுதல் என்ன என்பதை 15 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே தற்போது puzzle எனப்படும் புதிர் படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சிறு வயதில் படித்த கணக்குகளாக இருந்தாலும் மூளையை கசக்கி பிழிய வைக்கும் வகையில் இந்த புதிர்கள் இருக்கின்றன. போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை போல இந்த புதிர்கள் இருக்கும் என்பதால் நெட்டிசன்கள் இந்த புதிர் படங்களை வைரல் ஆக்கி விடுகிறார்கள்.

சிலர் புதிருக்கான விடையை கண்டுபிடித்து விட்டு தங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து அவர்களையும் விடையை கண்டுபிடி பார்க்கலாம் என சவால் விடுக்கிறார்கள். இப்படியாக புதிர் படங்களும் இணையத்தில் டிரென்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த புதிர் கணக்கில், 3 சமண்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் A, B மற்றும் C யின் கூடுதல் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த 3 சமன்பாடுகளை பயன்படுத்தி இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும். அதாவது, A + A + A = 39, B + B - A = 25, 6 + C + B = 50 என்ற மூன்று சமன்பாடுகளில் இருந்து A+ B + C = ? என்பதை 15 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஓகே உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 15. ஒகே டைம் ஓவர். சரியான விடையை கண்டுபிடித்து இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள். 57 என விடையை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் இது தான் சரியான விடை. A B Cயின் கூடுதல் 57 என விடை வந்திருந்தால் சரியான விடை இதுவே ஆகும். ஆனால் இந்த விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு நாங்களே எப்படி விடை வந்தது என்பதை சொல்லிவிடுகிறோம்.
முதல் சமன்பாட்டை முதலில் பாருங்கள். 3 A க்களின் கூடுதல் 39 என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு Aவின் மதிப்பு 13 என்று நமக்கு கிடைக்கிறது. (அதாவது A + A + A = 39 என்றால் 3 A = 39, எனவே A = 13) தொடர்ந்து 2 வது சமன்பாட்டில் A இன் மதிப்பை போடவும். இப்போது நமக்கு B யின் மதிப்பு 19 என்று கிடைக்கும். (அதாவது 2 B - 13 = 25 என இருக்கும். இதை சுருக்கினால், 2 B = 25 +13 = 38 என கிடைக்கும். தொடர்ந்து B = 19 என கிடைக்கும்)
A = 13, B = 19 என்ற இந்த மதிப்பை 3 வது சமன்பாட்டில் போட்டால், 6 + C + 19 = 50 என எழுத முடியும். இதனை சுருக்கினால், C = 50 - 19 - 6 = 25 என கிடைக்கும். இப்போது C யின் மதிப்பு 25 என கிடைத்துவிட்டது. இனிமேல் A B C யின் மதிப்புகளை கடைசி சமன்பாட்டில் பிரதியிட்டால், A + B + C = 13 +19 + 25 = 57 ஆகும். இதுவே சரியான விடை ஆகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications