சிவப்பு நிற "லிப்ஸ்டிக்" எங்கே இருக்கு? 99% பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண்கள் பயன்படுத்தும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை காணவில்லை. அந்த லிப்ஸ்டிக் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சேலஞ்ச். அதுவும் 6 செகண்டிற்குள் லிப்ஸ்டிக் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவீதம் பேரால் சரியாக விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் கரெக்டாக சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒருவரது கவனிப்புத் திறன், சிந்திக்கும் திறனை பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும் படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும். இதனை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் கூறுவார்கள். ஒருவர் ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்த்ததும், அவர் எந்த கோணத்தில் யோசிக்கிறார்? எந்த மாதிரி சிந்திக்கிறார்? என்பதை அவர்களது ஐக்யூ திறனை மதிப்பிட முடியும்.

இதனாலேயே இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது கலர்புல்லாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெண்கள் பயன்படுத்தும் "லிப்ஸ்டிக்கை" காணவில்லை. அது எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் ஆறு செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே டைம் ஓவர்.. படத்தில் மறைந்திருக்கும் லிப்ஸ்டிக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். நூற்றில் ஒருவர் தான் நீங்கள். உங்களது கவனிப்புத் திறன் அபாரமாக உள்ளது. ஆனால் 6 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் படத்தை மீண்டும் ஒருமுறை உற்று பார்க்கவும்.
படத்தில் ஒரு வீட்டின் அறை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் ஒரு மனிதர் வசிக்க அடிப்படையாக என்னென்ன இருக்க வேண்டுமோ அந்த பொருட்கள் எல்லாம் உள்ளன. மேஜை, நாற்காலி, அலமாரி, புத்தகங்கள், தட்டுகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இதில் தான் அந்த பெண்ணின் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும் இருக்கிறது.
இப்போது நினைப்பீர்கள்.. எல்லா பொருட்களும் இருக்கிறது.. ஆனால் நீங்க கேட்ட லிப்ஸ்டிக்கை மட்டும் காணவில்லையே என்று.. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றாலே சற்று சவால் நிறைந்தது தான். எனவே இதற்கெல்லாம் சோர்ந்து போக வேண்டாம். அந்த அறையில் இருக்கிற ஒவ்வொரு பொருட்களாக பொறுமையாக நீங்கள் பார்த்தாலே விடையை கண்டுபிடித்து விட முடியும். இப்போது 30 சதவீதம் பேர் லிப்ஸ்டிக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள்.
ஆனால் இப்போதும் லிப்ஸ்டிக் இருக்கும் இடம் தெரியவில்லையே என்பவர்களுக்கு ஒரு "டிபஸ்" கொடுக்கிறோம். அதாவது படத்தின் மேஜை மீது மட்டும் உற்று கவனித்து பாருங்கள். அங்கு தான் லிப்ஸ்டிக் இருக்கிறது. மேஜை மீது உள்ள அலங்கார பெட்டிக்கு பின்புறம் மட்டும் உற்று பாருங்கள்.
சிவப்பு நிறத்தில் மூடியுடன் கூடிய லிப்ஸ்டிக் அங்கு இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும். இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள். தெரியாத ஒரு சதவீதம் பேருக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. லிப்ஸ்டிக் இருக்கும் இடத்தை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications