படத்தில் பாம்பு எங்கே இருக்கு? 1% பேரால் மட்டுமே முடியும்.. 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு ஒன்று உள்ளது. இந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். வெறும் 1 சதவிகிதம் பேரால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஒரு வித தோற்றத்தை காண்பித்தாலும், உண்மையில் அந்த படமானது வேறொரு தோற்றத்தை காண்பிக்கும். பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் சக்தி அந்த படத்துக்கு உண்டு என்று சொல்லலாம். ஏனென்றால் பார்த்த உடன் அந்த படம் என்ன மாதிரியானது என்று சொல்ல முடியாது.

நன்கு கூர்ந்து பார்த்தால் தான் விடை நம் கண்களுக்கு புலப்படும். இதனால் ஒருவரது சிந்தனைத்திறன் மேம்படும். ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஒரு ட்விஸ்ட் ஒளிந்திருக்கும் வகையில் தான் இந்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள்.
இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. அதாவது இயற்கையான சூழலில் காடு ஒன்றின் பகுதி படமாக கொடுக்கப்பட்டுள்ளது. காடு என்றாலே புழு, பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் தான் இங்கு பாம்பு ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. .. 10. ஓக்கே டைம் ஓவர். படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு தேடுங்கள். அதேபோல் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் இந்த படத்தில் பச்சை பாம்பு தான் மறைந்திருக்கும் என்ற கோணத்தில் தேட வேண்டாம்.
இப்போது முயற்சி செய்து பாருங்கள்.. விடையை பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள், படத்தின் தரையில் மண் தெரிகிறது அல்லவா அங்கு மட்டும் உற்று கவனித்து பாருங்கள். இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications