அதிபுத்திசாலியால் தான் கண்டுபிடிக்க முடியும்.. பெண்ணின் "கணவர்" எங்கே இருக்கிறார்? 7 செகண்ட் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் நிற ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் உள்ளார். இந்த பெண்ணின் கணவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதிபுத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே இந்த படத்தில் மறைந்துள்ள ஆணின் உருவம் தெரியும். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. கலர் கலரான புகைப்படங்களும், பிளாக் அண்ட் ஒயிட் நிற படங்களும், புதிர் படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் என்றாலே பார்ப்பவர்களின் கண்களை குழப்பி ஒருவரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்.

optical illusion offbeat trend

இதனால் ஒருவரது சிந்தனைத்திறனானது விரிவடையும். சாலையில் செல்லும் போது தூரத்தில் பார்க்கும் போது தண்ணீர் இருப்பது போல் தோன்றும். ஆனால் அருகே சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது. அது போல தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் நம் கண்களை குழப்பமடைய செய்யும். இதனால் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களை நாம் பார்க்கும் போது அறிவுத்திறன் வளர்ச்சியடைகிறது.

ஒருவரது சிந்தனைத்திறன், அறிவுத்திறனை தூண்டும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பெண் ஒருவர் காட்டுக்குள் மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருக்கிறார்.

முதலில் படத்தை பார்க்கும் போது இந்த படத்தில் ஒரு பெண் மட்டுமே இருப்பது போல் நம் கண்களுக்கு தெரியலாம். ஆனால் அதிபுத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே இங்கே ஆண் ஒருவரும் மறைந்து இருப்பது தெரியும். ஆம், இந்த படத்தில் இருக்கும் பெண்ணின் கணவரும் இங்கே தான் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.

7 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3 .. .. 7. ஓக்கே நேரம் முடிந்தது. விடையை கண்டுபிடிக்க முடிந்ததா?.. குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் உண்மையாகவே அதிபுத்திசாலிதான். உங்களது அறிவுத்திறன் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம்.

ஆனால் கொடுக்கப்பட்ட டைமுக்குள் உங்களால் பெண்ணின் கணவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியவில்லையா?.. கவலைப்பட வேண்டாம். இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். படத்தை முதலில் நன்றாக கவனிக்கவும். காடு போன்று கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மரத்தடியில் பெண் ஒருவர் இருக்கிறார். அவர் கையில் விசிறி ஒன்றை வைத்துள்ளார்.

மடியில் புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு அதை படித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த பெண்ணை தவிர மற்ற யாரும் படத்தில் தெரியவில்லையே.. என்று நீங்கள் சொல்வது புரிகிறது. இங்கே தான் நீங்கள் சின்ன ட்ரிக்சை யூஸ் செய்ய வேண்டும். அதாவது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடையை கண்டுபிடிக்க முடியும்.

எனவே நீங்கள் பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். அதாவது படத்தை தலைகீழாக மாற்றி பாருங்கள்.. அட ஆமா.. இப்போது ஆண் ஒருவர் இருப்பது போல் தெரிகிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆம்.. அது தான் சரியான விடை.. படத்தை தலைகீழாக திருப்பி பார்க்கும் போது ஆண் ஒருவரின் முகம் தெரியும். அவர் தான் இந்த பெண்ணின் கணவர்.

கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் இப்போது விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இன்னும் விடை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+