2 பேரில் "பெண்ணின் கணவர்" யார்? சின்ன ட்ரிக்ஸ் தான்.. ஈசியா சொல்லிடலாம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் பெண்ணின் கணவர் யார்? என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். ஒரே ஒரு சின்ன டிரிக்ஸ் தான். இதை கண்டுபிடித்துவிட்டால் போதும், இரண்டு பேரில் யார் அந்த பெண்ணின் கணவர் என்று ஈசியாக சொல்லிவிடலாம். 7 செகண்ட் தான் டைம். கண்டுபிடிங்க பார்க்கலாம்.
கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஆப்டிகல் புதிர் படங்கள். புதிர் படங்களும் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் போன்றே இந்த புதிர் படங்களும் அமைந்து இருக்கும்.

உதாரணமாக விடை நம் கண் முன்னே இருக்கும். ஆனால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் நாம் பல்வேறு கோணங்களில் யோசித்து பார்க்கும் போது ஒரு சின்ன விஷயத்தை மறந்துவிடுவோம் அல்லவா.. அது போலத்தான். இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால், "இவ்வளவு பண்ணியும், கடைசியில மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துவிட்டோமே" என்று சொல்வது போலத்தான்.
அந்த வகையில் தான் ஒரு சின்ன ட்ரிக்ஸை யூஸ் பண்ணி விடையை கண்டுபிடிக்கும் விதமாக, ஒரு ஆப்டிகல் புதிர் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்தோம் என்றால் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். நடுவில் இருக்கும் பெண்ணின் கணவர் இந்த இரண்டு ஆண்களில் ஒருவர் தான். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும்.
7 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் யார் அந்த பெண்ணின் கணவர் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ். 1.. 2.. 3....7. ஓகே டைம் ஓவர். என்ன இரண்டு பேரில் யார் அந்த பெண்ணின் கணவர் என்று கண்டுபிடிக்க முடிந்ததா?.. குறிப்பிட்ட டைமுக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் புத்திசாலிதான். எவ்வளவு பெரிய பிரச்சினைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
ஆனால் எதை வைத்து பெண்ணின் கணவரை கண்டுபிடிப்பது என்று தெரியாமல் மூளையை கசக்கி பிழிந்து கொண்டிருப்பவர்கள் கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக அந்த பெண்ணின் பொருட்கள் எதாவது அந்த இரண்டு ஆண்களில் ஒருவரோடு ஒத்து போகிறதா என்று பாருங்கள். அதை வைத்து விடையை சொல்லிவிடலாம்.
உதாரணத்திற்கு அந்த பெண்ணிடம் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக உற்று கவனியுங்கள். இப்போது நீங்கள் யார் அவர் என்று கண்டுபிடித்து இருக்கக் கூடும். எனினும் இன்னுமும் விடை தெரியவில்லையே என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் வலதுபுறத்தில் இருப்பவர் தான் அந்த பெண்ணின் கணவர்.
எதை வைத்து சொல்லுகிறீங்க.. என்று நீங்கள் மனதில் நினைப்பது தெரிகிறது. அதாவது பெண்ணின் பாக்கெட்டில் உள்ள செல்போன் வால் பேப்பரை பார்த்தால் உங்களுக்கு புரிந்துவிடும். அட.. ஆமா! என்று சொல்வது புரிகிறது. அந்த செல்போனில் வலதுபுறம் நிற்பவரின் படம் தான் உள்ளது. எனவே இதுவே சரியான விடையாகும். கீழே உள்ள படத்திலும் விடை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications