வட இந்திய ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் சிக்கிய கனடா சுற்றுலாப் பயணி.. மறக்க முடியா அனுபவம் என நெகிழ்ச்சி
சென்னை: கனடா சுற்றுலாப் பயணிகள் இருவர், இந்தியாவில் ரயில்களில் ஸ்லீப்பர் கோச்சில் உள்ள வேறுபாடு தெரியாமல் சாதாரண வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் புக் செய்து உள்ளனர். இரவு முழுக்க தூங்காமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டாலும் இப்படி ஒரு பயண அனுபவத்தை நான் எங்குமே பார்த்தது இல்லை என சிலாகித்து இருக்கிறார்கள் அந்த சுற்றுலாப் பயணிகள்.. அப்படி என்னதான் நடந்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில் பயணம் என்பது பயணிகளின் உணர்வுகளில் கலந்த ஒன்றாக உள்ளது. ரயில் பயணத்தின் போது கிடைக்கும் ஸ்நேகிதம், புதியவர்களின் பழக்கம் என பயணம் முடியும் வரை நெருங்கிய நண்பர்கள் போல மாறிவிடுவார்கள்.

வட இந்திய ரயில் பயணம்
பொதுவாக இந்தியாவில் அதுவும் வட இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் போது பல மோசமான அனுபவமே கிடைப்பதாக பயணிகள் பலரும் கருத்து தெரிவிப்பது வழக்கம். முன்பதிவு பெட்டியில் ஏறி இருக்கையை ஆக்கிரமித்துக் கொள்வது, கழிவறை கூட செல்ல முடியாத அளவிற்கு பயணிகள் ஏறி நிற்பது என மோசமான அனுபவமே கிடைத்தது என பயணிகள் பலரும் பகிர்ந்து இருப்பதை பார்க்க முடியும்.
இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலரும் இப்படியான கசப்பான பயண அனுபவங்களை அனுபவித்ததாக கூறுவதை பார்க்க முடியும். கனடாவை சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள், மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் தெரியாமல் டிக்கெட் போட்டுள்ளனர்.
நெகிழ்ந்து பதிவிட்ட கனடா பயணிகள்
ரயில்களில் அவர்களுக்கு கிடைத்த பயண அனுபவத்தை தற்போது தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றிய விவரத்தை பார்ப்போம்.
கனடா நாட்டு சுற்றுலாப் பயணி கிம் கிரீன்வுட் இவரும் அவரது நண்பரும் மகாராஷ்டிராவில் உள்ள ஜலகோன் சந்திப்பில் இருந்து சந்திராப்பூருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளனர். 7 மணி நேர பயண தூரம் கொண்ட இந்த நகரத்திற்கு ரயிலில் ஏறிய பிறகுதான், ஸ்லீப்பர் கோச், மூன்றாம் வகுப்பு ஏசி, செகண்ட் ஏசி என பல்வேறு வகையான கிளாஸ்கள் இருப்பது அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது.
தூங்க முடியவில்லை என்றாலும்
தெரியாத்தனமாக வந்து சிக்கிக் கொண்டோம்டா சாமி என நினைத்த கிம் கிரீன்வுட் மற்றும் அவரது உடன் வந்த நபருக்கு அடுத்துதான் மறக்க முடியாத பயண அனுபவம் கிடைத்துள்ளது. ஸ்லீப்பர் கிளாஸ்தானே நன்றாக தூங்கிவிடலாம் என நினைத்தவர்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. தாங்கள் இருந்த அந்த கோச்சில் குழந்தைகளும் அதிகமாக இருந்துள்ளன.
இதனால், சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனால் அவர்களால் தூங்க முடியவில்லை. ஆனாலும் எரிச்சல் அடையாத கனடா பயணிகள் இருவரும், சக பயணிகள் காட்டிய அக்கறை அரவணைப்பு நெகிழ வைத்துள்ளது. இது குறித்து கனடா சுற்றுலாப் பயணி கிரீன் வுட் கூறுகையில், ஒரு சமூகமே ஒன்றாக இணைந்து, ஒரே பெரிய குடும்பமாக இணக்கமாக வாழ்வதைப் பார்த்தபோது ஏற்படும் அனைத்து சிறந்த உணர்வுகளும் எனக்கு ஏற்பட்டன.
வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது
நான் மிகவும் பிரமித்தேன், ஆச்சரியமடைந்தேன்" என்று கூறினார். சக பயணிகள் தங்கள் கொண்டு வந்த உணவை பகிர்ந்துள்ளனர். பயணிகள் காட்டிய அந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நட்புணர்வு தன்னை நெகிழவைத்ததாக அந்த பெண் பயணி கூறினார். ரயிலில் கடைசி வரை தங்களால் தூங்க முடியவில்லை. ஆனாலும் இது தங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை." என்று பதிவிட்டுள்ளனர்.
கனடா சுற்றுலாப் பயணிகளின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் கிடைக்கும் இந்த ஆதரவும், சகோதரத்துவ பாசமும் உலகின் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications