Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆல் பாஸ் ரத்து.. சரியா? தவறா? அரசுப் பள்ளிகளுக்கு ஆப்பு? எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு திடீரென்று நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள ஆல் பாஸ் ரத்து முறையால் மாநில அரசுப் பள்ளிகள் எந்தவகையில் பாதிக்கப்படும்? அதனால் கல்வி கற்றும் பிள்ளைகள் என்ன பின்னடைவைச் சந்திப்பார்கள்? இந்த நடைமுறை சரியா? அல்லது தவறா? என்பது பற்றி கல்வியாளர்கள் பலர் அளித்த விளக்கத்தைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசு கல்வி அமைச்சகம் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக திடீரென்று அறிவித்தது. அது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த நடைமுறை தமிழ்நாட்டில் தொடரும் என தெரிவித்திருந்தார். மேலும் இந்த அறிவிப்பு மத்திய அரசின் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

pm narendra modi cm mk stalin

ஆனால், மாநில அரசின் இந்த முடிவு தவறானது என்றும் இதனால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவது தடைப்படுகிறது என்றும் ஒரு சில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்த கல்வியாளர் நெடுஞ்செழியன், “இதனால் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும். ஏனெனில் 5 ஆம் வகுப்பிலேயே கடினமான தேர்வுமுறையைப் பிள்ளைகள் எதிர்கொண்டால், அவர்கள் அச்சப்பட்டு முழுமையாகக் கல்வி கற்பத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறிவிடுவார்கள். கிராமப் புற மாணவர்களையும் மலைவாழ் மக்களின் பிள்ளைகளையும் நகர்ப்புற மாணவர்களையும் ஒரே அளவீட்டில் வைத்து கல்வி போதிக்க முடியாது. அது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று எச்சரித்திருக்கிறார்.

அதேபோன்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, “கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. இந்திய அளவில் அதிக கல்லூரிகள் இங்கேதான் உள்ளன. இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் எனப் பட்டியல் போட்டால் 20% தமிழ்நாட்டில்தான் உள்ளது. உயர்கல்வி பயிலும் பிள்ளைகள் அதிகம் உள்ள மாநிலம் இது. அப்படி என்றால் நம் கல்விமுறை சரியாக உள்ளது என்பதுதான் அர்த்தம்” என்கிறார்.

இதை மறுக்கிறார் கல்வியாளர் காயத்ரி. அவர், “5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் ஆல் பாஸ் முறை இருப்பதால் எப்படி தேர்வு எழுதினாலும் நாம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என அலட்சியமான ஒரு போக்கு மாணவர்கள் மத்தியில் உள்ளது. அதனால் 9 ஆம் வகுப்புத் தேர்வில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.10 ஆம் வகுப்பு வரும்போது அவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்” என்கிறார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 21ஏ உருவாக்கப்பட்ட பின் கல்வியை யார் அளிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசுதான் தன் சொந்த செலவில் மக்களுக்குக் கல்வியை தரவேண்டும். கட்டணம் இல்லாமல் கல்வி வழங்க வேண்டும். அதற்காகத்தான் நாம் வரி கட்டுகிறோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத்தான் கல்வி உரிமைச்சட்டம் 2009 நடைமுறைக்கு வந்தது. அப்போது அதன் மீது பல விமர்சனங்கள் இருந்தன. அதிலிருந்த ஒரு சிறப்பான ஷரத்து என்னவென்றால் 14 வயது வரை ஒரு பிள்ளை தனது குழந்தைப் பருவத்தை எந்தவித அழுத்தமும் இல்லாமல் அனுபவிக்க அச்சட்டம் வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான். அதனால் எந்தவித கல்வியையும் கற்றுத்தராமல் யாரும் ஆல் பாஸ் போடவில்லை. தேவையான கல்வி கொடுக்கப்படுகிறது. பரீட்சை என்ற சுமையை மட்டுமே தவிர்த்திருக்கிறோம்.

இந்த 2009 சட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு ஒரு பொதுத் தேர்வை தேவையா? என்ற கேள்வி எழுந்தபோது, அதை மாநிலங்களின் முடிவுக்கே மத்திய அரசு விட்டுவிட்டது. ஆனால், அதை பொதுவாக்கி இருக்கிறது மத்திய கல்வி அமைச்சகம். இது புதியதல்ல. முன்பே மாநில உரிமைக்கு விடப்பட்டிருந்த ஒரு சட்டத்தை மத்திய அரசு பொதுவிதியாக அறிவித்திருக்கிறது. இதை முன்பே நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டாம் என மறுத்து இருந்தனர். தமிழகத்தில் இடைநிற்றல் இல்லாமல் 10 ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் கல்வி வளர்ச்சியை 99% நிறைவு செய்துவிட்டோம் என்று சொல்லி ஏற்க மறுத்துவிட்டது.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு ஒரு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என முன்பு போடப்பட அரசாணையைக் கூட திரும்பப் பெற்றுவிட்டது தமிழக அரசு. இதில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகள்தான் மாநில மக்களின் பிள்ளைகளுக்கு 12 வகுப்பு வரை கல்வியைக் கொடுக்கிறது. அவைதான் எண்ணிக்கையில் அதிகம். மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் சிறப்புப் பள்ளிகள்தான். அதன் எண்ணிக்கை குறைவு. எனவே மாநில அரசுக்குத்தான் குழந்தைகளின் கல்வி குறித்த தெளிவான புரிதல் இருக்க முடியும். ஒருசில பள்ளிகளை மட்டுமே நடத்தக்கூடிய மத்திய அரசின் விதிமுறையை அதிக எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளின் தரத்துடன் ஒப்பிட்டுத் தேர்வுகளைக் கொண்டு வருவது சரியானதல்ல” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+