திட்டத்தில் இருந்து நீக்கலாம்.. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து நீக்க முடியாது.. ஆளூர் ஷாநவாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் கருணாநிதி பெயரை திட்டங்களில் இருந்து நீக்கினாலும், வரலாற்றில் இருந்து அந்தப் பெயரை நீக்கவே முடியாது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியதே கலைஞர் தான் என்று கூறிய ஆளூர் ஷாநவாஸ், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சிந்தனை விதையை போட்டதே கலைஞர் கருணாநிதிதான் என்று கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8ஆம் தேதி நினைவி தின நிகழ்ச்சி திமுகவால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் திமுகவால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கான பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. கலைஞர் கனவு இல்லத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டப் பெயர்களில் இருந்து கலைஞரின் பெயர் நீக்கப்பட்டு வருகிறது.

Kalaignar Karunanithi

இந்த நிலையில் கலைஞரின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்கும் அந்த திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயரை தவெக அரசு மாற்றியுள்ளது.

ஆனால் அப்படியொரு திட்டத்தையே கொண்டு வந்தவர் கலைஞர். 1970களில் கலைஞர் முதல்வராக இருந்த போதுதான் குடிசை வீடுகளை அகற்றி அடுக்குமாடி வீடுகளை கட்டுவதற்கான விதை போடப்பட்டது. குடிசை மாற்று வாரியம் என்று அந்த வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர். அந்த திட்டத்தின் பெயரில் இருந்து கலைஞரை நீக்கிவிடலாம்.

ஆனால் அந்த சிந்தனையை ஊன்றிய வரலாற்றில் இருந்து கலைஞர் பெயரை நீக்க முடியாது. யாரை கேட்டாலும் சொல்வார்கள்.. மனித குலம் தோன்றிய நாளில் இருந்து குடிசை வீடுகள் இருக்கிறது. கலைஞர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு தான், குடிசை வீடுகளில் இருந்து மக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார்.

ஏழை மக்களின், எளிய மக்களின் தேவையை உணர்ந்தவர் கலைஞர். கலைஞரை அந்த வரலாற்றில் இருந்து நீக்கவே முடியாது. எல்லாவற்றிலும் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாகவே ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையப் போவதாக பேச்சுகள் எழுந்தன. நேற்று கலைஞர் நினைவு நாளுக்கு திருமாவளவன் எந்தவொரு பதிவையும் வெளியிடாத சூழலில், ஷாநவாஸ் திமுக நிகழ்சியில் பங்கேற்று பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+