"கை" வெச்சிட்டாங்களே.. கிட்ட கிட்ட நெருங்கியும் போச்சே.. திமுக கணக்கு புரியல.. அப்ப திருமா குஷி போல
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற அலசல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன
சென்னை: திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக யூகங்கள் வட்டமடித்து வரும்நிலையில், அது தொடர்பான முடிவுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.. திமுகவும்சரி, பாமகவும்சரி, இதுவரை கூட்டணி குறித்து வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.. எனினும், கூட்டணி தொடர்பான அரசல்புரசல்களும், முணுமுணுப்புகளும் வட்டமடித்தபடியே உள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் அழுத்தமாக சொல்லிவருவது, "பாமக- பாஜக அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும், பாஜக பாமக இருக்கும் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க மாட்டோம்... அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்" என்பார்.
இந்த கருத்தினை சமீபகாலமாகவே திருமாவளவன் அடிக்கடி சொல்லியும் வருகிறார்.. இதற்கு காரணம், வரும் எம்பி தேர்தலில் பாமக, திமுகவுடன் கூட்டணி வைக்க முயல்வதாக தகவல்கள் கசிந்ததுதான்.

3%
அதற்கேற்றபடி, திமுகவை, பாமக நெருங்கியே வருவதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டன.. குறிப்பாக, சித்திரை முழு நிலவு மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாகவும், எப்படியும் இதற்கு தமிழக அரசு அனுமதி தந்துவிடும் என்ற நம்பிக்கை பாமகவுக்கு கடந்த மாதமே ஏற்பட்டதாம். அதுமட்டுமல்லாமல், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லி ஒதுங்கியதற்கு காரணமே திமுக தரப்புதான் என்றும் முணுமுணுப்புகளும் எழுந்தன... ஏனென்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் உள்ள நிலையில், அந்த வாக்குகளை, தன் பக்கம் திருப்பவே பாமகவை "யாருக்கும் ஆதரவில்லை" என்ற நிலைப்பாட்டை திமுக எடுக்க வைத்ததாம்..

சீனியர் லீடர்
திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர், இதன் பின்னணியில் இருந்ததாகவும், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாகவும் நம்முடைய ஒன் இந்தியா தமிழிலேயே ஸ்பெஷல் செய்தி ஒன்றை நாம் பதிவிட்டிருந்தோம்.. அந்த அளவுக்கு பாமக, திமுக பக்கம் நெருங்கி கொண்டிருப்பதாகவே கருதப்பட்டு வந்தது.. அதுமட்டுமல்ல, கடந்த மாதம் பாமகவின் பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது சில தகவல்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

பாலு பளிச்
அப்போது, "2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 3 மாதத்திற்கு முன்பு தான், முடிவெடுப்போம் என்று மூத்த தலைவர் பாலு கூறியிருந்ததால், எப்படியும் திமுகவுடன் பாமக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாகவும் அறுதியிட்டு செய்திகள் வலம்வந்தன.

கிளியர் பாலு
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது, முதல்நபராக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து சொல்லியிருந்தார்.. எடப்பாடிக்கு அன்புமணியின் இந்த வாழ்த்தானது, பலரது புருவங்களையும் அப்போது உயர்த்திவிட்டு போனது என்றாலும், அரசியல் நாகரீகம் கருதி அன்புமணி அந்த வாழ்த்தினை சொல்லியிருப்பதாகவே நினைக்கப்பட்டது.. அந்தவகையில், திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கருதப்பட்ட நிலையில், அத்தனை கணக்குகளும் தற்போது என்எல்சி விவகாரம் காரணமாக நொறுங்கிவிழுந்து கொண்டிருக்கிறதாம்.

மெகா பின்னணிகள்
என்எல்சி நிலக்கரிச் சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக, என்எல்சி நிறுவனம் நிலம் விவசாயிகளிடம் கையகப்படுத்துவதற்கு, பாமக வலுவான எதிர்ப்பை பதிவு செய்துவருகிறது.. அந்த பகுதிகளில் இப்போது சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிர்வாகம் போலீஸ் துணையுடன் மேற்கொண்டு வருவதற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறது.. மேலும், என்எல்சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 11-ம் தேதி, முழு அடைப்பு போராட்டத்தையும் பாமக அறிவித்தது.. இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் காரணங்களும் இல்லாமல் இல்லை.

பிசுபிசுத்தது
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாமக வலுவாக உள்ள இடம் என்றாலும், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அடுத்தக்கட்ட அதிரடியை பாமக துவங்கி உள்ளது.. தலைமை பதவியை ஏற்றதில் இருந்தே, அன்புமணியின் வியூகங்களினால், புது ரத்தம் கட்சிக்குள் பாய்ச்சப்பட்டும் வருகிறது.. அந்தவகையில், ஏற்கனவே தாங்கள் வலுவாக இருக்கும் கடலூர் மாவட்டத்தில், மேலும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாகவே, இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்று பாமக தரப்பு கணக்கு போட்டதாம்.. ஆனால் 2 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் தலைமையில் போலீஸ் படையை திமுக அரசு குவித்துவிடவும், முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்து போய்விட்டதாக தெரிகிறது..

உள்ளே வெளியே
சமீபகாலமாகவே, திமுக அரசை விமர்சிக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடித்தும்கூட, இப்படி செய்துவிட்டார்களே? என்ற வருத்தம் தைலாபுர தோட்டத்துக்கு இருக்கிறதாம்.. அந்த வருத்தத்தில்தான், "மத்திய அரசை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினாராம் அன்புமணி.. எனினும் "கனத்த கூட்டணி நம்பிக்கை" தொடரவே செய்வதாக தெரிகிறது.. அன்புமணியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் விசிகவும் கவனித்தபடியே வருகிறது.. இதனால், "யார் உள்ளே? யார் வெளியே?" என்ற சஸ்பென்ஸ் நீடித்து கொண்டே வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

புருவம் உயர்த்தியது
இதனிடையே இன்னொரு விஷயத்தையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. சமீபத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு சாதகமாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு தந்திருந்த நிலையில், உடனடியாக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியிருந்தார். "அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தபோதே பாமக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டோம், அந்த வாழ்த்துகள் இப்போதும் செல்லும் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு இப்போதும் தொடர்வதாக பாமக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடிக்கு அன்புமணியின் இந்த வாழ்த்து பலரது புருவங்களையும் உயர்த்திவிட்டு போனது.

பூனைக்கும் மணி
அதேபோல, சேலத்தில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, "2026 ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.. அதற்கான பணி நாடாளுமன்ற தேர்தலில் துவங்கப்படும்... திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை; வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதாவது ஒருபக்கம் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லியிருந்த நிலையில், திமுகவுடன் இதுவரை கூட்டணி பேசவில்லை என்று அன்புமணி விளக்கம் தந்திருந்தது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை அப்போதே ஏற்படுத்தியிருந்தது.. எனவே, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதா? என்ற டவுட்டும் இப்போது கிளம்பி உள்ளதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications