வீரா.. ப்ளீஸ் வீரா... என்னை விட்டுடாதே.. கதறும் சரஸ்வதி.. போலீஸுக்கு வந்த காதல் சண்டை.. விசாரணை
போலீஸ்காரர் என்னை மிரட்டுகிறார் என்று இளம்பெண் புகார் அளித்துள்ளார்
சென்னை: "ப்ளீஸ் வீரா.. என்னை கல்யாணம் செய்துக்கோ" என்று பியூட்டிஷன் சரஸ்வதி கான்ஸ்டபிள் வீரமணியிடம் கெஞ்சும் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், போலீசாரின் விசாரணை தீவிரமாகி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் சரஸ்வதி.. 24 வயதாகிறது.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கான்ஸ்டபிள் வீரமணி மீது ஒரு புகார் தந்திருந்தார்.
அதில், "என் வீட்டிற்கு வந்த வீரமணி குடும்பத்தினர், வீடு சிறியதாக உள்ளது.. என் மகன் சப்-இன்ஸ்பெக்டருக்கு படிக்க போறான்.. அதனால் வேறு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறோம்" என்று வீரமணியின் தந்தை மிரட்டினார்.. தன்னையே கல்யாணம் செய்வதாக சொல்லியதை நம்பி அவருடன் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டேன்.. மோசடி செய்த கான்ஸ்டபிள் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

வீரமணி
கிரவுண்டுக்கு பிராக்டிஸ் செய்ய போகும்போதெல்லாம் வீரமணியை சந்தித்துள்ளார் சரஸ்வதி.. வீரமணிதான் முதலில் வந்து சரஸ்வதியிடம் காதலை சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்து கொள்வதாக பலமுறை சொல்லி சொல்லியே இவர் மனதை கரைத்தாராம். மே 27-ம் தேதி வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஆசை வார்த்தை கூறியதால் எல்லை மீறியுள்ளார்.. இதற்கு பிறகுதான் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததாக சரஸ்வதி கூறுகிறார்.

கல்யாணம்
இதை பற்றி சரஸ்வதி மேலும் சொல்லும்போது, "என் குடும்பம் வசதியா இல்லையாம்.. இதை ஒரு சாக்காக சொல்லி கல்யாணத்தை வேணாம்னு சொல்றார்.. ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளும்படி சொல்லியும் வீரா கேட்கவில்லை.. அவருடைய அப்பாவும் போலீஸா இருந்து ரிடையர் ஆனவர்.

மிரட்டறார்
அதனால்தான் என்னால பிரச்சனையை சமாளிக்க முடியாம, சட்டரீதியாக இதை கையில் எடுத்திருக்கேன்.. நான் போலீசுக்கு போய் புகார் தந்ததும், "இப்படி புகார் பண்ணினால், ரோட்டிலேயே வெச்சு பெட்ரோல் ஊற்றி உன்னை கொளுத்திடுவேன்"னு மிரட்டறார்.. நான் செக்-அப்புக்கு கூட ரெடியாகதான் இருக்கேன்" என்று கதறி அழுகிறாராம் சரஸ்வதி.

தவறு மேல் தவறு
இதனிடையே, "நான் சரஸ்வதியை கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறேன்.. எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேசணும்னு சொல்லியும் வரல.. யாருடைய தூண்டுதலின் பேரிலோ தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார்" என்கிறார் சம்பந்தப்பட்ட வீரமணி!

ஆடியோ
அதேபோல, முழுமையான விசாரணை நடந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள சரஸ்வதி, "வீரா.. ப்ளீஸ் வீரா... என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்று கெஞ்சி கதறும் ஆடியோவையும் ஒப்படைத்துள்ளாராம். இதில் யார் மீது தவறு உள்ளது என்று தெளிவாக தெரியவில்லை.. எனினும், இது சம்பந்தமான விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications