தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளரான பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எஸ்பி அலுவலகத்தில் தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் தவெக வேட்பாளர் பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரகாசம் என்ற தவெக நிர்வாகி கூட்டநெரிசலை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து கட்சி தலைமையிடம் கூறியதாகவும் ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரின் 6 பிரிவுகளின் கீழ் பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக வேட்பாளர் பிரகாசம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன் தினம் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். இதில் சென்னை பூந்தமல்லி வேட்பாளராக குட்டி என்ற பிரகாசம் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் பிரகாசம் மீது தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தனது கணவருடன் வந்து அந்த பெண் புகார் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் பங்கேற்று இருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. மேடையில் நின்றிருந்தவர்களை நிர்வாகிகள் ஒழுங்குப்படுத்தினர்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்
அப்போது குட்டி என்ற பிரகாசம் என்பவர் தவெக மகளிரணி பெண் ஒருவரை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தவெக நிர்வாகிகளிடம் கூறப்பட்டது. அப்போது கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தனராம். ஆனால் நேற்று முன் தினம் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
மேடையில் இருந்த போது 4 முதல் 5 முறை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அது குறித்து கேட்டபோது என்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெட்டிசன்கள் கேள்வி
மேலும் பிரகாசத்தை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாற்றத்திற்கான கட்சி, பெண்களின் பாதுகாப்புக்கான கட்சி என்று கூறி வரும் விஜய், 6 மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவருக்கு எப்படி சீட் கொடுத்தார் என்று நெட்டிசன்கள் வரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பக்கம் பக்கமாக பேசும் விஜய், இதை பற்றியெல்லாம் கண்டுக்கொள்ள மாட்டாரா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதிமுகவும் இல்லை திமுகவும் இல்லை.. எங்கள் கட்சி மாற்றத்திற்குரிய கட்சி என்று சொல்லிதான் விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். ஆனால், அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிற்கவைக்கப்பட்டவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications