சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடி மரம் அமைப்பதை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடி மரத்தை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடிமரத்தை அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத் துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860 ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என்றும், தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், சடங்கு - சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்பதால், தில்லை கோவிந்தராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலைய துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications