முன்னாள் தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் சிக்கியது எப்படி? 2021ல் என்ன நடந்தது?
சென்னை: ஒரு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் எப்படி சிக்கினார் என்பதை இப்போது பார்ப்போம். அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் விரிவாக பார்ப்போம்.
சரியாக சொல்வது என்றால் 2021ம் ஆண்டு, அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வந்தது. முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு வழங்கப்பட்டிருந்தது. ராஜேஸ் தாஸ், தமிழகத்தின் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஸ்க்கு கணவர் ஆவார்.

அன்றைய சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்றுள்ளார். அங்கு தான் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. வாங்க காரில் வந்து ஏறுங்க.. சில விஷங்கள் உங்ககிட்ட பேசணும் என்று கூறி பெரம்பலூரில் இருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றி கொண்டு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தான் பயணித்துள்ளார்.
சில்மிஷம்: அப்போது சில நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு தனது காரில் ஏறிக்கொள்கிறார் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி. இந்த சம்பவத்தின் போது பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் ராஜேஸ் தாஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
தடுத்த அதிகாரிகள்: இதனால் கடும் கோபம் அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, உடனே புகார் தெரிவிப்பதற்காக சென்னைக்கு விரைகிறார். ஆனால் அவர் செங்கல்பட்டு அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு போலீஸ் படை அவரை வழிமறித்து அவரது கார் சாவியை பறித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது, மேலும் அப்போது புகார் கொடுக்க வேண்டாம் என்று சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி வரை போன புகார்: அதேநேரம் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் சொல்லி, புகார் கொடுக்க கிளம்பினாராம். ஆனால் அவரை புகார் கொடுக்க போகவிடாமல் அங்கிருந்த அதிகாரி தடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் டெல்லி வரை போனில் அழைத்து சொல்லவும், அவரை தடுக்க வேண்டாம் என உத்தரவு பறக்கிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய எஸ்பி விட்டுவிடுகிறார்.
பணியிடை நீக்கம்: இதனை தொடர்ந்து அன்றைய டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் தனக்கு நடந்தவற்றை அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாராக தெரிவிக்கிறார். இந்த புகாரின் பேரில் விசாரணை கமிட்டி அமைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
வழக்கு பதிவு: இதையடுத்து சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி (அப்போதைய எஸ்பி) ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசு தரப்பில் 68 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
ராஜேஸ்தாஸ் குற்றவாளி: விசாரணை முடிந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் குற்றவாளி என்று அறிவித்தார். அத்துடன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications