பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ் பேக் அறிவித்த ரயில்வே! யுடிஎஸ் ஆப் வச்சிருக்கீங்களா.. உடனே இத பண்ணுங்க
சென்னை: ரயிலில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை புக் செய்ய ரயில்வேயின் யுடிஎஸ் செயலி முக்கிய பங்காற்றுகிறது. இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளையும் எடுக்க முடியும். இந்த யுடிஎஸ் செயலியில் ஆர் வேலட் அல்லது ஏடிவிஎம் மூலம் டிக்கெட் புக் செய்தால் 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டிசியில் முன்பதிவு செய்வதை போல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையில் எடுக்கும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்காக யூடிஎஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில்களை போல புறநகர் மின்சார ரயில்களிலும் இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலானா பயணிகள் இந்த யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தே பயணிப்பதை பார்க்க முடிகிறது. கவுண்டர்களில் போய் டிக்கெட் எடுத்தால் காத்திருக்க வேண்டும். சில்லரை பெறுவதில் பிரச்சினை போன்றவற்றை தவிர்க்கும் விதமாக பலரும் யுடிஎஸ் செயலியை பயன்படுத்துகின்றன. தற்போது யுடிஎஸ் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் இன்னும் பல பயணிகள் யுடிஎஸ் செயலியை பயன்படுத்தாமல் நேரில் சென்று டிக்கெட் எடுப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்கள். அவர்களையும் யுடிஎஸ் செயலியை பயன்படுத்த வைக்கும் நோக்கத்தில் சில சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அதேபோல ரயில்வே வாலட் பயன்படுத்தி டிக்கெட் எடுப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக டிஸ்கவுண்ட்டுகளை ரயில்வே அறிவித்து வருகிறது.
யுடிஎஸ்களில் டிக்கெட் எடுக்கும் போது சில நேரங்களில் டிக்கெட் கட்டணம் பிடிக்கப்பட்டாலும் டிக்கெட்டுகள் வருவதில்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. ரயில்வே வாலட்டில் பணத்தை சேமித்து வைத்து டிக்கெட் புக் செய்தால் வேகமாகவும் டிக்கெட் வராமல் போகும் பிரச்சினை இருக்காது எனவும் சொல்லப்படுகிறது.
ஐ.ஆர்சிடிசி கணக்கு விவரங்களை போல போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை வழங்கி ரயில்வே வேலட்டினை பயணிகள் தொடங்கலாம். இந்த வேலட்டில் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். டிக்கெட் எடுக்கும் போது வாலட்டில் உள்ள பணத்தை செலுத்த முடியும். இதற்கு ரீசார்ஜ் செய்யும் போது 3 சதவீத சலுகை வழங்கப்பட்டுவந்தது.
தற்போது, யுடிஎஸ் மொபைல் ஆப் அல்லது ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஏடிவிஎம் மூலம் டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகையானது எல்லா வகை முன்பதிவு டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை, ரயில்வேயின் யூடிஎஸ் செயலியில் உள்ள ஆர் வேலட் அல்லது ஏடிவிஎம் மூலம் வாங்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications