விஜய்-டிகே சிவகுமார் சந்திப்பு அவசியமா? வாசகர்களே கமெண்ட் செய்யுங்கள்
சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பெங்களூரில் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசு சார்பாக உறுதியாக அறிவிக்காத நிலையில், கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் இன்று அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் வருகையை உறுதி செய்து இருக்கிறார்.
மேலும் விஜய்யை காவிரி நீர் பாசன பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வறட்சி நிலவரத்தை காண்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே முதல்வர் விஜய் கர்நாடக செல்லக்கூடாது என்று பிரதான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பேச்சு வார்த்தைகள் முடிந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துவிட்ட நிலையில், இப்போது பேச்சுவார்த்தையை தொடங்குவது நமக்குத்தான் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நீதிமனஅறமே சொல்வதற்கு இது வழிவகுக்கும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுக்கின்றன.

வறட்சி காலகட்டத்தில் இரு மாநிலங்களும் எவ்வாறு நதி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி வரையறை இல்லாத காரணத்தால் பேச்சுவார்த்தை நடத்துவது தான் சிறப்பான தீர்வாக இருக்க முடியும் மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது. வாசகர்களே இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications
