நடிகை கவுதமி புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் மீது வழக்குப் பதிவு.. குடும்பத்துடன் தலைமறைவு
சென்னை: நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வருகிறார். அவருக்கு பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.

தாய் தந்தையின்றி பெண் குழந்தைக்கு தாயாக தனித்து தவித்து வரும் கவுதமிக்கு அழகப்பனின் குடும்பத்தினர் ஆறுதலாக இருந்துள்ளனர். இதனால் கவுதமி அழகப்பனை மலை போல் நம்பியுள்ளார். மேலும் தனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்லவிலைக்கு விற்று தருமாறு கவுதமி கேட்டிருந்தார்.
அந்த பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்துள்ளார். இதனால் நம்பிக்கைக்குரிய அழகப்பனை அணுகியுள்ளார். அவரும் தனக்கு தெரிந்த அண்ணாநகர் 6ஆவது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் பலராம், செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை கவுதமிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரும் சேர்ந்து அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக கவுதமிக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த நிலத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணமாக கவுதமி எழுதி கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக அந்த இருவரும் கவுதமியிடம் தெரிவித்தனர். மேலும் நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கவுதமியிடம் கையெழுத்து பெற்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து கவுதமிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு கவுதமி மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் பேரில் கவுதமி ரூ.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
வருமான வரித் துறை கடிதத்தால் சந்தேகம் அடைந்த கவுதமி சொத்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016ஆம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கவுதமி இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆயினும் 40 நாட்கள் ஆகியும் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனது மனக்குமுறல்களை எல்லாம் நடிகை கவுதமி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கடிதத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை கவுதமியின் புகாரின் பேரில் அழகப்பன், அவருடைய மனைவி நாச்சி அழகப்பன் , மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் அவர்கள் 6 பேரும் தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications