Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக கடந்த சில நாட்களாக முயன்று வந்தது. இதை அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனாவே ஒப்புக்கொண்டு இருந்தார்.. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய கரூரில் அந்த 'கசிந்த' ட்ரோன் வீடியோக்கள் வெறும் தற்செயல் அல்ல என்கிறார்கள் விபரமறிந்த அரசியல் விமர்சகர்கள். இந்த காட்சிகள் உண்மையானதா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்ட அரசியல் விமர்சர்கள் இந்த வீடியோக்களை பகிர்ந்து விமர்சனங்களை வைத்துள்ளனர்.

"மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறேன்!" - கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு கரூரில் விஜய் உதிர்த்த வசனங்கள் இவை. ஆனால், மக்கள் பிணங்களாகக் கிடந்தபோது, அங்கே ஒரு அரசியல் கட்சியின் 'மார்க்கெட்டிங்' வேலைகள் மிகத் தீவிரமாக நடந்திருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக சவுக்கு சங்கர் செய்திருந்த போஸ்டில்,'ஜனநாயகன்' திரைப்படத்திற்காக, TVK தலைவர் விஜயின் குழுவினர் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரு இடங்களிலும் காட்சிகளைப் படம்பிடித்ததற்கான ஆதாரங்களை CBI தற்செயலாகக் கண்டறிந்துள்ளது.

இக்காரணத்தினாலேயே, அவர் விசாரணைக்காக மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டார். குழந்தைகள் உட்பட 41 பேரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில், திரு. விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.,.என்றுள்ளார். மாரிதாஸ் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்களும் இதே புகார்களை வைத்துள்ளனர்.

TVK Vijay

நேற்று எக்ஸ் (Twitter) தளத்தில் தீயாய்ப் பரவிய அந்த வீடியோக்கள், தமிழக அரசியலில் ஒரு 'மெகா' பூகம்பத்தையே கிளப்பியிருக்கின்றன.

கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக சில காட்சிகளை கரூரில் நடந்த கூட்டத்தில் விஜயின் படக்குழு எடுத்திருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சார வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம் என்று கூறப்படுகிறது.

நக்கீரன் கோபால் புகார்

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக நக்கீரன் கோபால் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்து இருந்தார். நக்கீரன் கோபால் அளித்துள்ள பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

அதில், விஜய்யின் கரூர் கூட்டத்தில் 'ஜனநாயகன்' ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தை எல்லாம் படத்திற்க்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். கூட்டத்தில் அதற்கான காட்சிகள் எடுத்துள்ளனர் . அதை படத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டு காட்சிகள் எடுத்துள்ளனர். அந்த படத்திற்கான சூட் இதில் செய்ததாக எனக்கு தகவல் வந்தது. கட்டாயம் வரும்.

சேர்த்து வைத்து தாமதமாக வந்தது.. கூட்டம் சேர்த்தது எல்லாம் இதற்காகவே. படம் வரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு என்று தேடி மக்கள் வருகிறார்கள். நம்மை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை காக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை. அப்படி நினைக்காமல்.. அவர்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனநிலை எவ்வளவு மோசமான மனநிலை. அப்படி ஒரு மனநிலையோடு மோசமாக செயல்பட்டு உள்ளார் விஜய்.

அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்.. ஏது ஆனார்கள் என்று கூட கேட்காமல்.. ஓடி போய்விட்டார் விஜய், என்று நக்கீரன் கோபால் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு இடையே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் கடந்த சில மாதம் முன் வெளியானது. இதில் கரூர் பிரச்சாரம் போன்ற காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன

சி.பி.ஐ-யின் கையில் 'அமித் ஷா' ரிமோட்?

தமிழக அரசியலில் கால் பதிக்கத் துடிக்கும் பா.ஜ.க, விஜயை தன்பக்கம் இழுக்கப் போட்ட கணக்குகள் எடுபடவில்லை. "யாரோடும் கூட்டணி இல்லை" என்று விஜய் தன்னிச்சையாக அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே கரூர் வழக்கு வேகம் எடுத்தது தற்செயலா? சி.பி.ஐ என்பது நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு என்பது ஊரறிந்த விஷயம். இதனால் விஜய் வசமாக சிக்கி உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+