Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்..பாஜக எம்பி செல்வகணபதியிடம் சிபிசிபிஐ விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. செல்வகணபதி மூலம் சென்னையில் இருந்து நெல்லைக்கு பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

nainar nagendran bjp selvaganapathi

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

இதற்கிடையே வழக்கில் முக்கிய திருப்பமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் சென்னையை சேர்ந்த ஹவாலா இடைத்தரகர் பங்கஜ் சூரஜ் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்று தருமாறு கூறியதோடு மேலும் ஐந்து கிலோ தங்க கட்டிகளை புதுச்சேரியிலேயே செல்வ கணபதி விற்பனை செய்து விட்டதாகவும், தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்று கொடுத்தேன் என்றும் சூராஜ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக எம்பி செல்வகணபதி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து செல்வகணபதியை நேரில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி இடம் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 6 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பணத்தை நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதில் செல்வகணபதி மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றிருக்கிறது. மேலும் ஏற்கனவே கைதான ஹவாலா இடைத்தரகர் பங்கஜ் சூரஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்வகணபதியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் செல்வகணபதி அளித்த வாக்குமூலம் வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+