சிபிஐ + வருமான வரி.. ஒரே நேரத்தில் 2 செக்.. பாஜகவிடம் நட்பாக மாறும் விஜய்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக செய்திகள் வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பின் விஜய்க்கு இரண்டு விதமான அழுத்தங்களை டெல்லி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. விஜய்க்கு எதிரான வருமான வரி வழக்கு. 2. கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கு. இந்த வழக்குகளை சமாளிக்க விஜய் பாஜகவுடன் நெருக்கமாக வாய்ப்புகள் உள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

1. விஜய்க்கு எதிரான வருமான வரி வழக்கு
விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
விஜய் வருமான வரி வழக்கு
நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ், "வருமான வரிச் சட்டம் 271AAB(1) பிரிவின் கீழ் அபராதம் சரியாகவே விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
விஜய் தரப்பில் வாதம்
ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அபராத நடைமுறைகள் ஜூன் 30, 2019-க்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஜூன் 30, 2022-ல் அல்ல என்பதால், கால அவகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார். இதற்கு நீதிபதி, கால அவகாசம் தொடர்பான இதேபோன்ற வழக்கில் அவர் அளித்த தீர்ப்பை அக்டோபர் 10, 2025-க்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.
முன்னதாக, ரிட் மனுவின் பின்னணியை விளக்கிய, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ்,, 2015 செப்டம்பர் 30 அன்று விஜய்யின் இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விஜய் வீட்டில் இருந்த ஆதாரங்கள்
விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின.
காசோலைத் தொகைக்கு மட்டுமே டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, ரொக்கப் பரிவர்த்தனைக்கு அல்ல. இந்த ஆவணங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, விஜய் ₹5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டு அதற்கான வரிகளைச் செலுத்த சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத வருமானம் எவ்வளவு என்று கேட்டபோது, புலி படத்துக்காகப் பெற்ற ₹5 கோடி தவிர வேறு எந்த ரொக்கத்தையும் பெறவில்லை என்று பதிலளித்தார். இருப்பினும், வருமான வரித்துறைக்கு ஒத்துழைக்கும் வகையிலும், வரிச் சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்க்கவும், 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை (₹5 கோடி ரொக்கப் பரிவர்த்தனை உட்பட) வெளிப்படுத்தவும், அதற்கான வரிகளைச் செலுத்தவும் நடிகர் ஒப்புக்கொண்டார்.
2. கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கு
கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பாஜக அதிமுக - தவெக கூட்டணி
இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது பாஜக கூட்டணியில் அதிமுக, தவெக இரண்டும் இருக்கும். பாஜக 40 இடங்கள், தவெக 50 இடங்கள் மீதம் உள்ள இடங்களில் அதிமுக போட்டியிடும். விஜய் துணை முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை
இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications