சிக்க போகும் விஜய்! தவெக புள்ளிகளுக்கு ஓலை அனுப்பிய சிபிஐ! டெல்லிக்கு பறக்கும் தலைகள்! பரபர பனையூர்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட எட்டு பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் டிசம்பர் 29 அன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக பெரிய அளவில் தள்ளுமுள்ளம் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், 110 பேர் கடுமையாக காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது இந்தச் சம்பவத்தின் வேதனையை மேலும் அதிகமாக்கியது. இந்த விபத்துக்கான காரணம் என்ன, யாருடைய தவறால் இப்படியான நிலை ஏற்பட்டது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.

கரூர் சம்பவம்
முதலில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் கரூருக்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், மின்வாரியம், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் விளக்கங்களும் பெற்றனர். தவெக நிர்வாகிகள் சிலருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரித்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு முழுமையாக சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அது ஏற்கப்பட்டது.
சிபிஐ
பின்னர் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஒரு சிறப்பு குழு கரூருக்கு சென்று விசாரணையை தொடர்ந்து வருகிறது. இந்த விபத்து காவல்துறை பாதுகாப்பு குறைபாடா, இல்லை கூட்டத்தை ஒருங்கிணைத்த தவெக நிர்வாகிகளின் திட்டமிடல் தவறா என்ற இரண்டு கோணங்களில் சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. இதற்காக, நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முதல் அனுமதி ஆவணங்கள் வரை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல்
மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் உச்ச நீதிமன்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ சம்மன்
இந்நிலையில், தற்போது தவெக மாநில நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் டிசம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகி, கூட்ட நடந்த தினத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நிர்வகிப்பு தொடர்பான செயல்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விஜயிடம் விசாரணை
மேலும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்ற பின், தவெக தலைவர் விஜய்யிடமும் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் விஜய்க்கு சம்மன் அனுப்ப சிபிஐ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் காவல்துறை தரப்பிலிருந்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோரும் வரும் 29ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. அதாவது ஜனவரி முதல் வாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications