வேலையை தொடங்கிய சிபிஐ.. கொத்தாக எடுக்கப்பட்ட விஜயின் கால் ஹிஸ்டரி.. இப்படி ஒரு செக் வைக்க போறாங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சிபிஐ அமைப்பால் நேரடியாக விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.

TVK Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டையில் இருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு SIT விசாரணை தீவிரம் அடைந்தது..

முக்கியமான ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்

ஏற்கனவே ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே மீட்டிங் தாமதிக்கப்பட்டது தொடங்கி வாகனங்களில் இருந்த கேமராக்கள், சிசிடிவி சாட்சிகள் வரை பல விஷயங்களை அந்த குழு திரட்டி உள்ளதாம். அதோடு அங்கே நேரடி சாட்சியங்களாக இருந்த மக்களின் வாக்குமூலங்களை திரட்டி உள்ளதாம். ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தற்போது சிபிஐ வசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

சிபிஐ அமைப்பு வலக்கை விசாரிக்கும். சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள்.

சிபிஐ அமைப்பு விசாரணை

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சிபிஐ அமைப்பால் நேரடியாக விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக பின்வரும் 5 விஷயங்களை சிபிஐ எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. விஜயின் கால் ஹிஸ்டரியை சிபிஐ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று.. அதற்கு அடுத்த நாட்களில் விஜய் யாரிடம் எல்லாம் பேசினார் என்பது விசாரிக்கப்படும்.

2. விஜயின் செல்போனில் உள்ள படங்கள், வீடியோக்கள் எடுக்கப்படும். இதனால் அவர் பர்சனல் ரீதியாக சிக்கலாக்கு உள்ளாவார்.

3. விஜயின் வாகனத்தில் இருந்த வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளன. அந்த காட்சிகள் சோதனை செய்யப்படும்.

விஜய்க்கு செக்

இந்த விசாரணையை வைத்து விஜய்க்கு டெல்லி செக் வைக்கும். இந்த நெருக்கடி காரணமாக விஜய் அரசியல் சமரசங்களை செய்ய வேண்டி இருக்கும். அதாவது பல அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் காரணமாக அரசியல் தலைவர்கள் பாஜகவுடன் நெருக்கம் ஆகி உள்ளனர். அதே பிரஷர் விஜய்க்கும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

விஜய் மீது ஏற்கனவே வருமான வரித்துறை வழக்கு உள்ளது. வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு நெருக்கடியை கொடுக்கும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+