ரைட்ல போ.. லெஃப்ட்ல போ! ரூட்டை காட்டிய ஆதவ் அர்ஜுனா.. காருக்குள் பின் சீட்டில் பதுங்கிய விஜய்!
சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் நாளில் நடந்த சிபிஐ விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகும் இன்னும் பல கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், விஜய் நாளை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இதனால் இந்த வழக்கு தொடர்பான பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிபிஐ அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு விஜய் புறப்பட்ட நிலையில், டிரைவருக்கு ஆதவ் அர்ஜுனா வழிகாட்ட, விஜய் பின் சீட்டில் மறைந்தபடி அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் மாநில காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் நெரிசல் சம்பவம்
இந்நிலையில். கடந்த டிசம்பர் மாத இறுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் பிரச்சார கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அனுமதி, கூட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
விஜய் சிபிஐ விசாரணை
இந்த விசாரணைகளுக்குப் பிறகு, நேரடியாக விஜய்யிடமே விளக்கம் பெற வேண்டும் என்று முடிவு செய்த சிபிஐ, திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டார். அவருடன் தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட ஆறு பேர் டெல்லி சென்றனர். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற விஜய், அங்கு சுமார் ஏழு மணி நேரம் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிபிஐ அதிகாரிகள்
விஜய்யிடம் நடைபெற்ற விசாரணையின் போது, கரூர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், கூட்டத்துக்கு அனுமதி பெறப்பட்ட நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் விரிவாக பதில் அளித்ததாகவும், தன்னிடம் உள்ள தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை நிறைவு
முதல் நாள் விசாரணை முடிந்த பிறகு, இன்று இரவே விஜய் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாததால், அவர் டெல்லியிலேயே தங்கி, நாளை காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் விசாரணையில், கூடுதல் கேள்விகள் கேட்கப்படலாம் என்றும், முக்கியமான விளக்கங்கள் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விமர்சனம்
இந்த நிலையில் விசாரணை முடிவடைந்த பிறகு விஜய் தனது காரில் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார். காரின் முன் சீட்டில் ஆதவ் அர்ஜுனா அமர்ந்திருந்ததோடு, எந்த பக்கம் செல்ல வேண்டும் என வழிகாட்டியவாறு சென்றார். பின் சீட்டில் சிடிஆர் நிர்மல் குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அமர்ந்திருந்த விஜய் முகத்தை மறைப்பது போல இருந்தது. தற்போது இந்த காட்சிகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications