சென்னையில் சிபிஐ ரெய்டு.. பிரபல வங்கியின் முன்னாள் அதிகாரி வீட்டில் பரபர சோதனை.. பின்னணி என்ன?
சென்னை: சென்னையில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்து சி.பி.ஐ சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சிபிஐ ரெய்டுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை கே.கே.நகர், சத்யா கார்டன் பகுதியில் உள்ள கங்கா யமுனா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ராதாகிருஷ்ணன் கடந்த 9 மாதங்களாக சென்னை கே.கே.நகரில் உள்ள கங்கா யமுனா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை அதிரடியாக நுழைந்த சி.பி.ஐ அதிகாரிகள் அங்கு தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ராதாகிருஷ்ணன், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தொழிலதிபராக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் இன்று திடீரென அவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் வசித்து வரும் முன்னாள் வங்கி அதிகாரியும், தொழிலதிபருமான ராதாகிருஷ்ணன் வீட்டில் இந்த சிபிஐ சோதனை எதன் அடிப்படையில் என்ற விவரம் எதுவும் வெளியாகாததால் திடீர் ரெய்டு காரணமாக சென்னை கே.கே.நகர் பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், சிபிஐ ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராதாகிருஷ்ணன், விசாகப்பட்டினம் யூகோ வங்கியில் உதவி பொது மேலாளராக பணியாற்றியபோது, 2009-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகவே 2009-2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இவர் பணியில் இருந்த போது முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் சென்னை கே.கே.நகரில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டில் தினேஷ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்பட ஐந்து இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதாகிருஷ்ணன், வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபராக வலம் வருவதாக கூறப்படுகிறது. அவர் அதிகளவில் முதலீடுகள் செய்துள்ளதாகவும், அந்த பணம் எப்படி வந்தது என்ற அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications