சென்னை கிண்டி ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை! ஏன் என்னாச்சு?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் பெரியசாமி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நிறைய நட்சத்திர ஹோட்டல்கள் இருந்து வந்தாலும் இந்த ஹோட்டலில் முக்கிய விஐபிக்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் தங்குவது உண்டு.

இந்த ஹோட்டலை நடத்தி வருபவர் பெரியசாமி. இவருக்கு கல்வி நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெரியசாமியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கிண்டியில் பிரபல நட்சத்திர ஹோட்டல் மட்டுமின்றி பல்வேறு தொழில், கல்வி நிறுவனங்களை பெரியசாமி நடத்தி வருகிறார். இந்த சிபிஐ சோதனை எதற்காக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications