Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) சிபிஐ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறுகையில், அப்படி ஏதும் சம்மன் வரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

கரூர் கூட்டநெரிசல் வழக்கு
கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்து கிடந்த நிலையிலும் விஜய் அன்றைய தினமே சென்னைக்கு புறப்பட்டார். அவரிடம் விமான நிலையட்த்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் விஜய்யும் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சிபிஐ முன்பு ஆஜர் ஆனார்.
இருமுறை சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆன விஜய்
அப்போது விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? நெரிசல் ஏற்பட்ட பிறகு உடனடியாக சென்னை திரும்பியது ஏன்? என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஜனவரி 13 ஆம் தேதி ஆஜராக கூறிய நிலையில் பொங்கல் முடிந்து ஆஜர் ஆவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போதும் அவரிடம் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஆஜர் ஆக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?
ஆனால் அவர் நாளை தவெக சார்பில் போட்டியிட உள்ளவர்களிடம் நேர்காணல் நடத்த இருப்பதாகவும், இன்னொரு நாளில் ஆஜர் ஆவார் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனால் நாளை விஜய் ஆஜர் ஆக மாட்டார் என்றே கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் அப்படி சம்மன் எதுவும் வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை
முன்னதாக விஜய்யிடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய அதே நாளில், தமிழக காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி நிர்மல் குமார் ஜோஷி உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல, கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்திலும் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தி இருந்தது.
-
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications