Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ விசாரணைக்கும் விஜய் லேட்! கரூர் வழக்கில் 100 கேள்விகளுக்கு பதில்களை written-ல் வாங்கும் CBI?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரிடம் கேட்கப்படும் கேள்விகள், பதில்களை எழுத்துப்பூர்வமாகவும் வாங்கவும் சிபிஐ முடிவு செய்துள்ளதாம்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த அவரது பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

vijay karur tvk

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிபிஐ முதலில் விசாரணையைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்டோரை கடந்த மாதம் டெல்லி தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அவர் சரியாக 11.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். கரூர் சம்பவம் குறித்து அவரிடம் சுமார் 100 கேள்விகள் கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த விசாரணை மாலை 5 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின்போது எழுப்பும் கேள்விகளுக்கு விஜய் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டுமே விசாரணை நடைபெறும் என தெரிகிறது. தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிஐ முடிவு எடுக்கும் என தெரிகிறது.

எனினும் விஜய் இன்று இரவும் டெல்லியிலேயே தங்கியிருக்கிறார். அவர் நாளைதான் சென்னை திரும்புகிறார். எனவே அவருக்கு பாதுகாப்பு கோரி தவெகவினர் டெல்லி காவல் துறையினரிடம் மனு அளித்தது. அதன்படி அவருக்கு தேவையான பாதுகாப்பை கொடுப்பதாக டெல்லி போலீஸ் அளிப்பதாக தெரிவித்தது.

தவெக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு மணிக்கணக்கில் தாமதமாகவே வந்தார் விஜய். இதனால்தான் கரூரில் 41 பேரின் உயிர்கள் பறிபோனது. அப்படியிருந்தும் சிபிஐ விசாரணைக்கே அவர் அரை மணி நேரம் தாமதமாகவே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொன்ன பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாகவும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் மடக்கி கிடுக்கிப்பிடி கேள்விகளை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விசாரணையின் போது இடையிடையே புஸ்ஸி ஆனந்த் தூங்கிவிட்டதாகவும் அவ்வப்போது அவரை அதிகாரிகள் தட்டி எழுப்பி கேள்வி கேட்டதாகவும் பல்வேறு பத்திரிகையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் விஜய் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பராசக்தி படத்துடன் அவரது படம் போட்டி போட முடியாது என்பதால் ஜனநாயகன் படத்தை வேண்டுமென்றே வெளியிட விடாமல் கோர்ட்டுக்கு விஜய் போக வைத்ததாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+