Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் வழக்கில் ட்விஸ்ட்.. CBI குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பு? ஆட்டம் சூடுபிடிக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நடந்த சிபிஐ விசாரணையில், சம்பவம் நடத்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக சென்றது ஏன்? கீழே பிரச்சனை நடப்பது உங்களுக்கு தெரியாதா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? அவ்வளவு கூட்டம் இருந்த போது அதற்குள் ஏன் வாகனத்தை கொண்டு சென்றீர்கள்?

நெரிசல் அபாயம் இருப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? கீழே பிரச்சனை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? போலீஸ் வேண்டாம் என்று சொன்ன போதும்.. அதை மீறி உள்ளே ஏன் சென்றீர்கள்? என்று சிபிஐ இன்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

CBI will include the TVK Vijay name in the Karur case chargesheet

விஜய் விசாரணை - சிபிஐ

கடந்த முறை அவர் அளித்த பதில்கள்.. கட்சியின் மற்ற நிர்வாகிகள் அளித்த பதில்களை ஒப்பிட்டு அதன் அடிப்படியில் விஜய் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த விசாரணையை எப்படி நடத்துவார்கள்.. என்னென்ன கேள்விகள் எழுப்புவார்கள் என்று விசாரிப்பார்கள் என்று இங்கே பார்க்கலாம். விஜய் ஏற்கனவே அளித்த பதில்களின் அடிப்படியில் எழுந்துள்ள சந்தேங்கங்களை மனதில் வைத்து கேள்விகள் கேட்கப்படும்.

விஜய் கடந்த முறை விசாரணை

விசாரணையின் ஒரு கட்டமாக கடந்த வாரம் விஜய் விசாரணை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டார். இந்த விசாரணையில் விஜயிடம் பல முக்கியமான விஷயங்கள் கேட்கப்பட்டன. 100 கேள்விகள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அதில் டிக் அடிக்கும் வகையில் முதலில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பின் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளித்தார்.

அதன்பின் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. விஜய் தொடர்ந்து அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில்களை அளித்தார்.

இதில் விஜயிடம்.. நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தீர்கள்? கூட்டம் அதிகமாக இருந்தும் கூட நீங்கள் ஏன் பேச்சை தொடர்ந்தீர்கள்? நீங்கள் சம்பவ இடத்தில் போலீஸ் சொன்னதை கேட்டீர்களா? போலீஸ் உங்களிடம் கேட்ட சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையா? உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் என்ன? நீங்கள் பேசிய நேரம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு எல்லாம் விஜய் பெரும்பாலும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை, தமிழக அரசு கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை, தமிழக அரசு மக்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரவில்லை என்று மட்டுமே பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சிபிஐ விசாரணை

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முக்கியத்துவம் வாய்ந்த அல்லது சிக்கலான குற்ற வழக்குகளை எவ்வாறு ரகசியமாக விசாரிக்கிறது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், விசாரணையின் ரகசியத்தன்மையைக் காப்பதற்கும் சிபிஐ பயன்படுத்தும் இம்முறைகள் சட்டபூர்வமான நடைமுறைகளாகும்.

விசாரணைக்கென, நம்பகமான, மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறிய குழுவே நியமிக்கப்படும். கோப்புகள் மற்றும் விவாதங்களுக்கான அணுகல் கசிவுகளைத் தவிர்க்கக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. physical ஆக உள்ள கோப்புகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகின்றன. டிஜிட்டல் பதிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகளில் சேமிக்கப்படும்.

ஆவணங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், நிதித் தரவுகள், சிசிடிவி காட்சிகள் போன்ற அனைத்து ஆதாரங்களும் ஒரே பாதுகாப்பான இடத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் மற்றும் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

பொதுவாக பெரிய கிரைம் வழக்கில் சாட்சிகள் ஒரு திட்டமிட்ட வரிசையில் விசாரிக்கப்படுவர். இதனால், முந்தைய வாக்குமூலங்கள் அதற்கு பிந்தைய வாதங்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. வாக்குமூலங்கள் ரகசியமாகச் சரிபார்க்கப்படுகின்றன.

விஜய் விசாரிக்கப்படும் method?

சிபிஐ கரூர் வழக்கில் விஜயை தனியாக வைத்து ரகசிய அறையில் விசாரிக்கிறது. இது ரகசிய விசாரணை method ஆகும். சிபிஐ இந்த ரகசிய விசாரணை முறைகளைப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கங்கள்

ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்தல்.

சாட்சிகளைப் பாதுகாத்தல்.

அரசியல் அல்லது ஊடக அழுத்தங்களைத் தவிர்த்தல்.

நீதிமன்றத்தில் உறுதியான, பலமான வழக்குகளை உருவாக்குதல் போன்ற காரணங்களை மனதில் வைத்து தனி அறையில் விசாரிக்கப்படும்.

வழக்கு சீரியஸ்

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.

இதனால் நெருக்கமான சில உறவினர்கள் , நண்பர்களிடம் சொல்லி.. தமிழக அரசே கரூர் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்கலாம்.. பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.. டெல்லி விசாரணை வேறு மாதிரி செல்கிறது.. என்னை தேவையின்றி கோர்த்துவிட்டு விட்டார்கள் என்று விஜய் புலம்பி இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+