சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகியது. மொத்தம் 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் சென்னை மண்டலத்தில் மட்டும் 98.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக பார்க்கும் போது திருவனந்தரம் (99.79 சதவீதம்) முதலிடத்தை பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 வரை நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் இன்று 11 மணியளவில் சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் மொத்தம் 17,04,367 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 14,96,307 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு
அதாவது நடப்பு ஆண்டில் மொத்தம் 88.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இருந்தனர். கடந்த ஆண்டை விட தற்போது 0.41 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. எப்போதும் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்து வந்த நிலையில் இந்த ஆண்டு விஜயவாடா முதலிடம் பிடித்தது. சென்னை மண்டலம் 3 ஆம் இடத்தினை பிடித்தது. தென் மாநிலங்களே இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதங்களை பெற்றது. உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் 17 வது இடத்தில் 79.53 சதவீத தேர்ச்சி சதவீதம் பெற்று இருந்தது.
மொத்தம் 23.71 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 22.21 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2.37 சதவிகிதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் - 99.79 சதவிகிதம் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கவுகாத்தில் 84.14 சதவிகிதம் பெற்றுள்ளது.
ரிசல்ட் எப்படி பார்க்க வேண்டும்?
தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்க்க வேண்டும். cbseresults.nic.in., results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு ரிசல்ட் என இருக்கும். அதில் ஒன்றை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியினை கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் தேர்வு முடிவுகள் தெரியும். பின்னர் இதை அப்படியே டிஜிலாக்கர் கொண்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். Digilockerல் போய் தேர்வு முடிவுகளை பார்க்க உரிய லாகின் தகவல்கள் ஏற்கனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மாணவர்கள் ரோல் நம்பர், பள்ளி எண், பிறந்த தேதி, ஹால் டிக்கெட் மற்றும் டிஜி லாக்கர் பின் ஆகியவற்றை பயன்படுத்தி மார்க்ஷீட் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளும் வசதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications