சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. 93.12% பேர் தேர்ச்சி.. முதலிடம் எந்த மண்டலம் பாருங்க
சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள.
கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கிய சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதியன்று முடிந்தது. இந்த தேர்வை 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். அதேபோல 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதியன்று தொடங்கி மார்ச் 21ம் தேதியன்று முடிவடைந்தது. இதனை 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இவ்வாறு இருக்கையில், இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய என்கிற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம். கடந்த ஆண்டு 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வழக்கம்போல சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வெழுதிய மொத்த மாணவிகளில் 94.25% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 92.27% மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் 12-ம் வகுப்பை போலவே, 10-ம் வகுப்பு தேர்விலும், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க யார் முதலிடம் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என தெரிகிறது.
ஆனாலும், பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.. இந்த தேர்வில் 99.91% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. 76.90% தேர்ச்சியுடன் கௌஹாத்தி மண்டலம் கடைசி இடத்தில் உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications