CBSE Class 12 results 2026: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி பார்ப்பது?
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. சுமார் 18 லட்சம் மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கும் இந்த முடிவுகள் எப்போது முடிவுகள் வெளியாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே மாத நடுப்பகுதிக்குள்.

மே 10 முதல் மே 20 தேதிகளுக்குள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்தன.
மே மாதம் தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்களைப் பார்க்கலாம்:
இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க உங்கள் அட்மிட் கார்டில் (Admit Card) உள்ள இந்த விவரங்களைச் சரியாக வைத்திருக்கவும்:
ரோல் எண் (Roll Number)
பள்ளி எண் (School No.)
அட்மிட் கார்டு ஐடி (Admit Card ID)
பிறந்த தேதி (Date of Birth)
டிஜிலாக்கர் (DigiLocker) வசதி:
இணையதள நெரிசலைத் தவிர்க்க, 'டிஜிலாக்கர்' செயலி மூலமும் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம்.
digilocker.gov.in/cbse என்ற தளத்திற்குச் சென்று, உங்கள் மொபைல் எண் அல்லது அரசாங்க அடையாள எண்ணைக் கொண்டு உள்நுழையவும். இங்கு கிடைக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள் உயர்கல்விச் சேர்க்கைக்குச் சட்டப்பூர்வமாகச் செல்லும்.
UMANG செயலி: மொபைல் செயலி மூலமும் பார்க்கலாம்.
இணைய வசதி இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகளை அறியலாம் (இதற்கான எண்கள் விரைவில் அறிவிக்கப்படும்).
தேர்ச்சி மதிப்பெண்: ஒவ்வொரு பாடத்திலும் மற்றும் மொத்தமாகவும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் எடுக்க வேண்டும்.
மறுமதிப்பீடு: முடிவுகள் வந்த பிறகு மதிப்பெண் மறுசரிபார்ப்பு மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்.
அசல் சான்றிதழ்: இணைய முடிவுகள் தற்காலிகமானவை. அசல் சான்றிதழ்களைச் சில வாரங்களுக்குப் பிறகு உங்கள் பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான தகவல்களுக்குச் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பாருங்கள். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து ஒரு நகல் (Printout) எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் உரிய மதிப்பெண் பெறாத மாணவர்கள் தற்போது எஸ்ஆர்எம், விஐடி, அமிர்தா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அது போல் பிளஸ் 2 மதிப்பெண் தெரிந்து கொண்டால் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு காத்திருக்காமல் அவர்களுக்கு பிடித்த கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications