ஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அடுத்து வரும் 4 வாரங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவர் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்தக் கோரி கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்
அதில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்டவற்ற தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த தமிழக அரசுக்கு மனு அளித்தேன் ஆனால் இதுவரை தமது கோரிக்கைக்கு, தமிழக அரசு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்க வகை செய்ய வேண்டும்
இதற்காக தமிழக அரசுக்கு உாிய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியது.
மேலும் மேற்கண்டவை எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கருவிகளின் மூலம், பள்ளி வாகனங்களை கண்காணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாதத்திற்குள் பொருத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கையும் முடித்து வைத்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications