நீட்டான உடையில்.. ஒருவர் நகை பார்க்க.. இன்னொருவர் பெட்டியை லவட்ட.. பரபரப்பு சிசிடிவி காட்சி!
நகை கடையில் 2 பெண்கள் நகை திருடிய காட்சிகள் வெளியாகி உள்ளன
Recommended Video
சென்னை: ஸ்டைலாக நகைக்கடைக்குள் நுழைந்த 2 இளம் பெண்கள்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நகை பெட்டியையே லவட்டி கொண்டு மாயமானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம்.ஜூவல்லரி என்ற நகை கடை வைத்து உள்ளார். இந்த கடையில்தான் திருட்டு நடந்துள்ளது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

கடைக்கு 2 இளம் பெண்கள் நகை வாங்க உள்ளே வருகிறார்கள். ரெண்டு பேருமே நீட்டாக புடவை கட்டிக் கொண்டு, ஸ்டைலாக உள்ளனர். அங்கிருந்த சேரில் இருவரும் உட்கார்ந்திருக்க, கடை ஓனர் தருண்குமார் நகைகளை எடுத்து காட்டி கொண்டிருக்கிறார்.
இரு பெண்களில் ஒரு பெண் நகை வாங்குவது போல பாவ்லா காட்டுகிறார். என்னென்னமோ டிசைனில் நகை காட்டுமாறு கேட்க, தருண்குமாரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டினார்.
மற்றொரு பெண்ணோ, செல்போன் பேசிக் கொண்டே, அங்கிருந்த ஒரு நகை பெட்டியை அலேக்காக தூக்குகிறார். பிறகு டக்கென எடுத்து தன்னுடைய ஹேன்ட் பேக்கில் வைத்துவிடுகிறார். இதை தருண்குமார் கவனிக்கவே இல்லை.

இவர்கள் போனதும்தான் அந்த நகை பெட்டியை தேடி உள்ளார் தருண்குமார். அதில், சிறு சிறு பொருட்களாக சுமார் 150 கிராம் நகைகளை வைத்திருக்கிறார். அவை எப்படியும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். இது சம்பந்தமாக போலீசாரிடம் கடை ஓனர் புகார் அளித்ததன்பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
முதல்கட்டமாக, அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சியை வைத்து 2 பெண்கள் யார் என்ன என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதைதவிர 2 பெண்களை பிடிப்பதற்காகவே கொருக்குப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications