சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன்.. எது பெஸ்ட்? அதிக காற்றும் வேணும், கரண்ட் பில்லும் குறையணுமா?
சென்னை: கோடைக்காலம் வந்துவிட்ட நிலையில் பேன் இல்லாமல் வீட்டில் இருக்கமுடியாத சூழல் இருக்கிறது. இதனால் இதுவரை பேன் இல்லாதவர்கள் கூட இப்போது பேனை வாங்கி வருகிறார்கள். இதில் சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன்.. எது பெஸ்ட்? அதிக காற்றும் வேணும்.. ஆனால் கரண்ட் பில்லும் குறைந்து இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எந்த பேனை வாங்கலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.
கோடைகாலம் வந்துவிட்டது. பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மா இருந்தே புழுக்கத்தில் வியர்வை கொட்டும் அளவிற்கு வெயிலின் உஷ்ணம் உள்ளது.

கோடை வெயில் சுட்டெரிப்பு
பகலில்தான் இப்படி என்றால் இரவிலும் கடுமையான புழுக்கம் காணப்படுகிறது.. கரண்ட் கட் ஆனால், ஒரு நிமிடம் கூட வீட்டிற்குள் இருக்க முடியாத நிலை தற்போது வந்துவிட்டது. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் நிலமை ரொம்ப மோசம். வெயிலில் இருந்து தப்பிக்க வசதி படைத்தவர்கள் வீட்டில் ஏசி வாங்கி பொருத்தி கொள்கிறார்கள். வீட்டில் ஏசி இருப்பதனால், இதமான தட்ப வெட்ப நிலை அறைக்குள் இருக்கும்.
இதனால், வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், கரண்ட் பில்தான் கொஞ்சம் எகிறும்.. ஏசி பயன்பாட்டை பொறுத்தவரை ஓரளவு வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினருமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சாமானிய ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர வசதி கொண்டவர்கள் வரை அனைவர் வீட்டிலும் ஃபேன் தவறாமல் இருக்கும்.
சீலிங் ஃபேன்? டேபிள் ஃபேன்?
கோடைக்காலைத்தில் இரவும் பகலும் என நிற்காமல் மின்விசிறிகள் ஓடிக்கொண்டு இருக்கும். சிலர் டேபிள் ஃபேனையும் விரும்பி பயன்படுத்துவார்கள். இந்த இரண்டு ஃபேன்களில் எது பெஸ்ட்.. மின்சாரத்தையும் எது குறைவாக பயன்படுத்தும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சீலிங் ஃபேனை பொறுத்தவரை ஒரு அறையில் மாட்டினால் அறை முழுக்க பரவலாக காற்று வீசும். அதே நேரத்தில் டேபிள் ஃபேன் என்றால் எந்த திசையில் வைக்கிறமோ அதே திசையில் மட்டுமே காற்று வீசும். இது ஒரு அறை முழுக்க காற்று வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செட் ஆகாது. தனியாக வேலை பார்க்கும் பொதோ, படிக்கும் போதே தங்களுக்கு மட்டும் காற்று வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டேபிள் ஃபேன் பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கும்.
கரண்ட் பில் எதில் குறைவாக வரும்?
இரண்டிற்கு உள்ள மின் பயன்பாடு என கணக்கிட்டால் சீலிங் பேன் கொஞ்சம் கூடுதலாக மின்சாரத்தை இழுக்கும். சீலிங் ஃபேன் பொதுவாக முழு வேகத்தில் சுற்றா விட்டால் 60 முதல் 80 வாட்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் டேபிள் பேன் 30 முதல் 50 வாட்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறது. மின்சார பயன்பாட்டில் சீலிங் ஃபேன் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் திறன் அடிப்படையில் பார்த்தால் சீலிங் பேன் அறை முழுக்க காற்று வீசும்.
டேபிள் ஃபேன் மின்சார சிக்கனத்திற்கு கொஞ்சம் உதவும். ஆனால், இது அறை முழுவதுமான பயன்பாட்டிற்கு உதவாது. பாதுகாப்பை கணக்கில் கொண்டால் டேபிள் ஃபேனை விட சீலிங் பேன் கொஞ்சம் பாதுகாப்பானது. ஏனெனில், டேபிள் ஃபேன்கள் அறைக்குள்ளும் இடையூறாக இருக்கும். அதேபோல, சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இருந்தும் பத்திரமாக பாதுகாக்க வெண்டியிருக்கும். ஆனால் சீலிங் ஃபேனில் இந்த பிரச்சனை இல்லை..
நினைத்த இடத்தில் வைக்கலாம்
டேபிள் ஃபேன் என்றால் கடையில் இருந்து வாங்கி எளிதாக பொருத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், சீலிங் ஃபேன் என்றால் இதை சீலிங்கில் மாட்டுவதற்கு கொஞ்சம் செலவு பிடிக்கும். அதேபோல கழற்றுவதற்கும் எலக்ட்ரிஷியனை தேட வேண்டியிருக்கும். டேபிள் ஃபேன் என்றால் அப்படியே நினைத்த இடத்திற்கு எடுத்து சென்றுவிடலாம்.












Click it and Unblock the Notifications