பெண்களுக்காகவே உள்ள டாப் 5 திட்டங்கள்.. தமிழக அரசின் இந்த ஸ்கீம் பற்றி தெரிந்திருப்பது அவசியம்!
சென்னை: சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் டாப் 5 திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
1. விடியல் பயணம்
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதுமே கொண்டுவரப்பட்ட முக்கியான திட்டம், பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் திட்டம். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களால் அதிகம் பேசப்படும் திட்டம் இது. குறிப்பிட்ட தூரம் அல்லது நகரங்களுக்குள் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கையர் உட்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இலவசப் பேருந்து திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

2. மகளிர் உரிமைத் தொகை
குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக அவர்கள் யாரையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
முதலில் ஒரு கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக உள்ளனர். புதிய பயனாளர்கள் இணைக்கப்படுவதால் அடுத்த சில மாதங்களில் மேலும் சில லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர்.

3. புதுமைப்பெண் திட்டம்
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்காக இந்த சூப்பரான திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
கடந்த 2022 செப்டம்பர் முதல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் புதுமைப்பெண் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில், உயர் கல்வியில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.
அதோடு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் 'புதுமைப்பெண்' திட்டம் கடந்த ஆண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

4. இலவச தையல் இயந்திர திட்டம்
கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறைக்கு வழங்கப்படுகிறது.

5. மகளிர் சுய உதவிக்குழு கடன்
மகளிர் சுய உதவிக்குழு (SHG) என்பது, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் உருவாக்கப்படும் குழு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி ஆகியவை வழங்கப்படுகின்றன.
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு புதிதாக ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு தொழில் தொடங்க அரசால் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 7 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைந்து வருகின்றன.

-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது - மோடி! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications