"தமிழ்நாட்டில் டெல்டா +".. தலைமை செயலாளர் இறையன்புவிற்கு வந்த அவசர லெட்டர்.. 3 மாவட்டங்களில் ஆக்சன்!
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று மாவட்டங்களில் டெல்டா + வைரஸ் பரவலுக்கு எதிராக அவசர ஆக்சன் எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பான INSACOG ஆராய்ச்சி செய்து வருகிறது. டெல்டா + வகை பரவல் குறித்தும், புதிய உருமாறிய கொரோனா வகைகளை கண்டுபிடிக்கவும் இந்த ஜீனோம் ஆராய்ச்சியே உதவும்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து டெஸ்டிங்கை உயர்த்தும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. டெல்டா + கேஸ்கள் மேலும் பரவாத வகையில் இங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளது. தொடர்ந்து இங்கு கண்காணிப்புகள் அதிகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
இந்த அமைப்பின் ஆய்வின் படி தமிழ்நாட்டில் நேற்று காலை வரை 3 பேருக்கு டெல்டா + வகை கொரோனா இருந்தது. நேற்று மாலையே இதன் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில பரிந்துரைகளை செய்துள்ளது.

பரிந்துரை
தமிழ்நாட்டில் 9 கேஸ்கள் பதிவாகி உள்ளதால் இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனாவான் டெல்டா + பரவி வருகிறது. இது கவலையை ஏற்படுத்த கூடிய வகையான கொரோனா.

பாதுகாப்பு
இதை variant of concern என்று குறிப்பிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் 9 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. இது வேகமாக பரவ கூடியது. monoclonal சிகிச்சை முறை இதற்கு எதிராக பலன் அளிக்க வாய்ப்பு குறைவு. அதனால் தமிழ்நாட்டில் டெல்டா + கொரோனா கேஸ்கள் பரவி உள்ள மதுரை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் உடனே கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

மக்கள்
மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இந்த மூன்று மாவட்டங்களில் விதிமுறைகளை அதிகரிக்க வேண்டும். டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும். அதோடு வேக்சின் அளிப்பதை இந்த மாவட்டங்களில் உயர்த்த வேண்டும். முக்கியமாக இங்கு பாஸிட்டிவ் வர கூடிய மக்களில் சாம்பிள்களை INSACOG ஆராய்ச்சி மையத்திற்கு டெல்டா + சோதனைக்காக அனுப்ப வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரை
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து டெஸ்டிங்கை உயர்த்தும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. டெல்டா + கேஸ்கள் மேலும் பரவாத வகையில் இங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளது. தொடர்ந்து இங்கு கண்காணிப்புகள் அதிகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications