CBSE +2 results: Postpone- ஆகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்? புதிய நடைமுறையால் மாணவர்கள் கவலை
சென்னை: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், இந்த மாதம் 3 ஆவது வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மே 3ஆவது வாரம் என சொல்லப்படுவது மாணவர்களை பதைபதைக்க வைக்கிறது.
2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றன. காலை 10:30 மணிக்குத் தொடங்கி ஒற்றை ஷிப்ட்டில் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்கவும், விடையளிக்கவும் மொத்தம் 3 மணி 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ ஒரு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முதன்முறையாக 'திரைவழி மதிப்பீட்டு முறை' (On-Screen Marking System) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முடிவுகளை விரைவாகவும் பிழையின்றியும் வெளியிட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் தேர்ச்சி பெற Theory, செய்முறைத் தேர்வு (Practical) மற்றும் மொத்த மதிப்பெண்கள் என அனைத்திலும் தலா 33% மதிப்பெண்களைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
துணைத் தேர்வு: ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைபவர்களுக்குத் துணைத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
இரண்டுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள், முழு கல்வி ஆண்டையும் மீண்டும் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தனர். (மாணவிகள்: 91.64%, மாணவர்கள்: 85.70%).
மொத்த தேர்ச்சி: ஒட்டுமொத்தமாக 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மண்டல வாரியாக: மண்டல அளவில் விஜயவாடா 99.60% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்தது. பிரயாகராஜ் 79.53% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் உயர்கல்விச் சேர்க்கைக்காக இந்த முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் கீழ்க்கண்ட தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் தங்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
இணையதளம்
results.cbse.nic.incbseresults.nic.incbse.gov.in
செயலிகள்: உமங் (UMANG) செயலி மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) ஆகியவற்றில் பார்த்துக் கொள்ளலாம்.
IVRS: தொலைபேசி அழைப்பு (Interactive Voice Response System) மூலமாகவும் முடிவுகளை அறியலாம்.
SMS வசதி: உங்கள் மொபைலில் 'cbse12 [roll number]' எனத் தட்டச்சு செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், முடிவுகள் உங்கள் எண்ணிற்கே வந்து சேரும்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications