Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமே ஜாலிதான் போங்க.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! பறந்து வரும் ஹேப்பி நியூஸ்! எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த உயர்வு, இம்முறை ஹோலி பண்டிகைக்கு முன்பாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஹோலி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வருவதால், அதற்கு முன்பே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அகவிலைப்படி உயர்வை கணிக்க முக்கியமான அளவுகோலாக கருதப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) அறிக்கையை மத்திய தொழிலாளர் பணியகம் சமீபத்தில் வெளியிட்டது.

2025 டிசம்பர் மாதத்துக்கான இந்த குறியீட்டு மதிப்பு 148.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த தரவின் அடிப்படையில், இம்முறை அகவிலைப்படி சுமார் 2 சதவீதம் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 58 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இந்த உயர்வுக்குப் பிறகு 60 சதவீதமாக உயரக்கூடும் என கூறப்படுகிறது.

Central Government DA Hike Holi

அகவிலைப்படி உயர்வு

இந்த உயர்வு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அறிவிப்பு மார்ச் மாதத்தில் வந்தாலும், ஊதிய உயர்வு ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதனால் நிலுவை தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை, ஊழியர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. முதல் உயர்வு ஜனவரி மாதத்திற்கும், இரண்டாவது உயர்வு ஜூலை மாதத்திற்கும் அமல்படுத்தப்படும். ஆனால் அறிவிப்புகள் பெரும்பாலும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு வெளியாகும் நடைமுறை இருந்து வருகிறது. அதனால் இந்த முறை ஹோலிக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியாகலாம் என்ற கணிப்பும் வலுத்துள்ளது.

அரசு ஊழியர் சம்பள உயர்வு

அகவிலைப்படி உயர்வு குறித்து அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பு தேசியத் தலைவர் மன்ஜீத் சிங் படேல் தெரிவித்ததாவது, இம்முறை ஹோலிக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அகவிலைப்படி வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், பணவீக்கத்தால் ஊழியர்களின் வருமானத்தில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதாகும். அடிப்படை சம்பளம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு மாற்றமின்றி இருக்கும்.

எட்டாவது ஊதியக் குழு

ஆனால் விலைவாசி உயர்வை சமநிலைப்படுத்தும் வகையில் அகவிலைப்படி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த வருமானம் படிப்படியாக உயருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் காலம் முடிவடைந்த பின்னர், அடுத்ததாக எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்த சில காலம் எடுக்கும் என கூறப்படுகிறது. அந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் வரை அடிப்படை சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் அகவிலைப்படி உயர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதால், ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் உயர்வு காணப்படும்.

அகவிலைப்படி உயர்வு

இந்த சூழலில், அகவிலைப்படி உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆர்வத்துடன்காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஹோலி பண்டிகைக்கு முன்பாக அறிவிப்பு வந்தால், அது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சிகரமானதாக அமையும் சூழல் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+