அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எகிறுதா.. 44% ஊதிய உயர்வு விரைவில்?.. மத்திய அரசு சொன்ன சூப்பர் நியூஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி 4% அகவிலைப்படி உயர்வு + போனஸ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னொரு குட்நியூஸ் எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு (8th Pay commission) அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.
மத்திய அரசு: இப்போதைக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள், அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்..

அதனால்தான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருவேளை, 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பலவேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கலாம், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரக்கூடும், இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் நிலவிவருகின்றன.
எப்போது அறிவிப்பு: ஆனால், இப்போதுவரை 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் அரசு அறிவிக்கவில்லை.. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, சமீபத்தில்தான், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி 4% அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது.. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
அதிகாரிகள் முடிவு?: ஆனால், 8வது ஊதியக் குழு குறித்து இப்போது விவாதிப்பது சரியல்ல என்று அரசாங்க அதிகாரிகள் கருத்து சொல்கிறார்களாம்.. 2024 தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் முடிவெடுக்கப்படலாம் என்றும் கூறுகிறார்களாம்.
எனினும், 8வது சம்பள கமிஷன் வந்தால், அதன் உருவாக்கம் 2024 இறுதிக்குள் நடக்கும் என்றும், 2026க்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
டபுள் குஷி: ஒருவேளை, 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்ட்டர், 3.68 மடங்காக அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.. அப்படியானால், 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் 2.57 (ஃபிட்மென்ட் பேக்டர்) அடிப்படையில் அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறுகிறார்கள் என்றால், இந்த அடிப்படை ஊதியம் 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஆக மொத்தம் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்படும் என்பது உறுதியாகியிருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் படுகுஷியில் இருக்கிறார்களாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications