அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வரப்போகுது.. என்னாது 50% அகவிலைப்படியா? மத்திய அரசு விரைவில் நல்ல சேதி
சென்னை: 8வது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வரும்நிலையில், இதுகுறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
குறைந்தபட்சம்: புதிய ஊதியக்குழு அமலானால், ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு உயரும், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரக்கூடும், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே, வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்றும், 2026க்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புது தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கேற்றவாறு, 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ஊதியக்குழு: இப்படிப்பட்ட சூழலில், அடுத்த ஊதியக்குழு வந்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்ற யூகங்கள் மீண்டும் கிளம்பி உள்ளன.. அதாவது, ஏழாவது ஊதியக்குழு விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுமாம்.. பிறகு, அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத DA சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் என்கிறார்கள்.
கடந்த ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது... எனவே, ஜனவரி 2023-லும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.. அப்படி ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதனால்தான், இதற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
புதிய கமிஷன்: விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளதால், அதற்கு முன்னதாகவே, இந்த புதிய கமிஷனை நியமித்து, ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை மத்திய அரசு தரப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்படும் என்பது உறுதியாகியிருப்பதால், ஊழியர்கள் படுகுஷியில் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications