சுரண்டப்படுகிறதா தென் இந்தியா? காத்திருக்கும் ஆபத்துகள்? ஜெயரஞ்சன் எச்சரிக்கை
சென்னை: தென் மாநிலங்களில் வசூலாகும் நிதியை மத்திய அரசு என்ன செய்கிறது என்ற சந்தேகத்திற்குப் புள்ளி விரவத்தோடு கூடிய விளக்கத்தை அளித்துள்ளார் மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.
தென் இந்திய மாநிலங்களின் நிதி சுரண்டப்படுகிறது என்ற குரல் முன்பைவிட பலமாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. ஒட்டு மொத்தமாகத் தென் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போராட்டக் களத்தில் மோடி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

உண்மையில் வசூலாகும் நிதி என்ன ஆகிறது? தென் இந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏன் நிதியைக் குறைத்துக் கொடுக்கிறது. இப்படியான பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்.
"மத்திய அரசு பொத்தாம் பொதுவாக எல்லா நிதியையும் கொடுத்துவிட்டோம் என்று சொல்கிறது. ஆனால், நான் குறிப்பிட்டு சில விசயங்களைச் சொல்கிறேன். State Disaster Response Fund (SDRF) வருடத்திற்கு இவ்வளவுத் தொகை என்று முன்கூட்டியே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கிவிடும்.
அதை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்குவார்கள். பிப்ரவரி மாதம் தருவதாக இருந்த SDRF இரண்டாவது நிலுவைத் தொகையை டிசம்பர் மாதமே வழங்கியது மத்திய அரசு.
இது பேரிடர் தொகை இல்லை. வழக்கமாகத் தரப்படும் தொகை. தமிழ்நாடு அரசு சேதம் அதிகமாக உள்ளதால் தேசிய பேரிடர் தொகையிலிருந்து அதிக நிதியைக் கேட்கிறது. அதைத் தராமல், வழக்கமாக ஒதுக்கும் நிதியைக் கொடுத்துவிட்டு, பொய்யாக ஒரு செய்தியைத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

'குஜராத் மக்கள் 60,000 கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது? குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?' என்று 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அன்றைய குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி பேசினார்.
இப்போது 2024 பிப்ரவரி 7இல் பிரதமராக இருக்கும் மோடி, 'எங்கள் வரி எங்கள் பணம்' எனச் சிலர் பேசுகிறார்கள். இது என்ன மாதிரியான பேச்சு? இது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது' என மாற்றிப் பேசுகிறார்.
இது யாரை ஏமாற்றும் செயல்? சொல்லுங்கள்.

இங்கே பிரச்சினை எங்கே உருவானது என்றால் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கி concurrent list கொண்டு போய் விட்டார்கள். இப்போது மாநிலங்களின் அதிகாரம் சுருக்கப்பட்டுவிட்டது. இது மிகப்பெரிய ஆபத்தானது என்று பல ஆண்டுகள் முன்பே பலர் வாதிட்டு உள்ளனர்.
அம்பேத்கர் இது குறித்துச் சொல்லும்போது ஒரு இடத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றும் இல்லை. இது யார் கையில் செல்கிறதோ அவனை வைத்துத்தான் இது என்ன செய்யும் என்பதை முடிவு செய்ய முடியும்' என்று சொல்லி இருக்கிறார். அதன் விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
1950களில் இருந்ததைப்போல் இந்தியா இன்றைக்கு இல்லை. ஹிந்தி பெல்ட் என்று சொல்லக் கூடிய மாநிலங்கள் வளர்ச்சியில் பின் தங்கி விட்டன. அதைப்போல் கிழக்கு மாநிலங்களும் வளர்ச்சி அடையாமல் தேங்கிவிட்டன.
தென் மாநிலங்களும் மேற்கு மாநிலங்களும் மிகப்பெரிய அளவில் இன்று வளர்ச்சியடைந்துவிட்டன. இதில் சிக்கல் எங்கு உள்ளது என்றால்? வளர்ந்த மாநிலங்களுக்கும் வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பொதுவாக ஒரு மத்தியில் உள்ள அரசு இந்த இடைவெளியைச் சரி செய்ய வளர்ச்சி அடைந்த மாநிலத்திலிருந்து கிடைக்கும் வரிப்பணத்தை வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு வழங்கி அதைச் சமம் செய்ய முயற்சி செய்வார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட இதைத்தான் செய்யும்.
ஆனால், இந்தியாவில் என்ன பிரச்சினை வந்துள்ளது என்றால், வளர்ச்சி அடைந்த மாநில வரிப்பணத்தை வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு வழங்கினாலும் அந்த இடைவெளியைச் சரிசெய்ய முடியவில்லை. ஏனென்றால் அந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதான் இங்கே ஆபத்து.
அதன் விளைவுதான் இன்று தென்மாநிலங்கள் சேர்ந்து போராடத்தொடங்கி உள்ளது. கர்நாடகா முதல்வர் எங்கள் மாநிலத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று டெல்லி சென்று போராட்டம் நடத்துகிறார்.
தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்து தங்கள் மாநிலம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதைப்போன்று கேரளாவும் தெலங்கானா டி.ஆர்.எஸ். கட்சியும் கூட குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.
இதை உணராமல் மத்திய அரசு சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் சரியாகத்தான் பகிர்ந்து அளிக்கிறோம் என்று சொல்வது மட்டும் சரியாக நடவில்லை.
Centrally Sponsored Schemes. இது மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள். இந்தத் திட்டம் இதுவரை எப்படி நிதியைப் பகிர்ந்து செலவு செய்யும் என்றால், மாநில அரசு 25% செலவு செய்யும். மத்திய அரசு 75% செலவு செய்யும்.
ஆனால், இப்போது 15வது நிதிக்குழு பரிந்துரைக்குப் பின்னர் மாநில அரசு 45% செலவு செய்ய வேண்டும் என மாற்றி விட்டார்கள்.

அதைப்போல மத்திய அரசே நேரடியாகச் செலவு செய்யும் திட்டங்களுக்கான நிதி அளவை பெரிய அளவுக்கு உயர்த்திக் கொண்டார்கள். எக்கச்சக்கமாக அந்தப் பணம் மத்திய அரசு வழியாக மட்டுமே புழங்குகிறது.
அந்தத் திட்டங்கள் மூலம் மத்திய அரசு நேரடியாக எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செலவழிக்க முடியும். அப்படித்தான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் 20 ஆயிரம் கோடியைச் செலவு செய்துள்ளார்கள்.
அயோத்தி ராமர் கோயிலுக்காக புதிய ஏர்போர்ட், ரயில் நிலையம் என்று அங்கே பணம் கொட்டப்படுகிறது. அதற்கு எல்லாம் மத்திய அரசுக்கு எப்படி நிதி கிடைக்கிறது என்றால், நம் மாநிலத்திலிருந்து போகும் வரியிலிருந்து தான்.
ஒவ்வொரு மாநிலத்திற்கு என்றும் சில செலவுகள் உள்ளன. மாநில அரசு ஒவ்வொன்றும் அவர்களின் மாநில முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். அவர்களுக்கு எப்படி நிதி கிடைக்கும். மத்திய அரசு பிரித்துத் தந்தால்தானே?
ஆனால், மத்திய அரசு மாநில அரசுகளிடம் இருந்து வரியை வசூலித்துக் கொண்டு, வேறு எங்கோ போய் செலவிடுகிறது. அதனால் தென் மாநில அரசுகள் நிதி கிடைக்காமல் திண்டாடுகின்றன. இதுதான் முக்கிய பிரச்சினை" என்கிறார்
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications